முதுகில் குத்தியவர்களுக்கு நன்றி, மீண்டும் எழுவேன்

முதுகில் குத்தியவர்களுக்கு நன்றி, மீண்டும் எழுவேன்

“விவேகம்“ வசனத்தைக் குறிப்பிட்டு 'முதுகில் குத்தியவர்களை' சாடியிருக்கிறார் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன்

சிம்புவை நாயகனாக வைத்து 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' படத்தை இயக்கினார் ஆதிக் ரவிச்சந்திரன். மைக்கேல் ராயப்பன் தயாரிப்பில் வெளியான இப்படம் பெரும் தோல்வியை சந்தித்தது. இதனைத் தொடர்ந்து தனது புதிய படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் ஆதிக்

இதனிடையே தொடர்ச்சியாக தன்னைப் பற்றி தவறாகப் பேசிவந்தர்களை சாடியிருக்கிறார் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன்.

இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் “இந்த உலகமே உன்னை எதிர்த்தாலும், எல்லா சூழ்நிலையும் நீ தோத்துட்ட தோத்துட்டனு உன் முன்னாடி நின்னு அலறினாலும், நீயா ஒத்துக்குற வரைக்கும் எவனாலும் எங்கயும் எப்பவும் உன்னை ஜெயிக்க முடியாது. நெவர் எவர் க்வ் அப். முதுகில் குத்தியவர்களுக்கு நன்றி. மீண்டும் எழுவேன்.“ எனக் குறிப்பிட்டுள்ளார்.

Calendar

« November 2017 »
Mon Tue Wed Thu Fri Sat Sun
    1 2 3 4 5
6 7 8 9 10 11 12
13 14 15 16 17 18 19
20 21 22 23 24 25 26
27 28 29 30      
Go to top