“அர்ஜுன் ரெட்டி“ தமிழ் பெயர் வெளியானது

“அர்ஜுன் ரெட்டி“ தமிழ் பெயர் வெளியானது

தமிழில் உருவாகவுள்ள 'அர்ஜுன் ரெட்டி' படத்துக்கு 'வர்மா' என்ற பெயரில் உருவாகவுள்ளதாக பாலா இயக்கவுள்ளார்.

'அர்ஜுன் ரெட்டி' படத்தின் தமிழ் ரீமேக்கில் விக்ரமின் மகன் துருவ் நாயகனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

பாலா இயக்கவுள்ள இப்படத்துக்கு 'வர்மா' என பெயரிட்டுள்ளார்கள் இத்தலைப்பை விக்ரம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.

தற்போது 'நாச்சியார்' படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக இருக்கும் பாலா, அதனைத் தொடர்ந்து 'அர்ஜுன் ரெட்டி' ரீமேக்கில் கவனம் செலுத்தவுள்ளார்.

சந்தீப் வங்கா இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா, ஷாலினி பாண்டே உள்ளிட்ட பலர் நடிப்பில் ஆகஸ்ட் 25-ம் தேதி வெளியான தெலுங்குப் படம் 'அர்ஜுன் ரெட்டி'. குறைந்த திரையரங்குகளில் வெளியாகி, மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றதால் திரையரங்குகளின் எண்ணிக்கை பல மடங்கு உயர்த்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Latest News

Calendar

« November 2017 »
Mon Tue Wed Thu Fri Sat Sun
    1 2 3 4 5
6 7 8 9 10 11 12
13 14 15 16 17 18 19
20 21 22 23 24 25 26
27 28 29 30      
Go to top