இறுதிக்கட்டத்தில் தனுஷின் ‘வடசென்னை’

இறுதிக்கட்டத்தில் தனுஷின் ‘வடசென்னை’

‘விசாரணை’ படத்தின் மிகப் பெரிய வெற்றிக்கு பிறகு வெற்றிமாறன் இயக்கத்தில் தயாராகிவரும் படம் ‘வடசென்னை’.

தனுஷ் ஹீரோவாக நடித்து வரும் இப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், ஆண்ட்ரியா, டேனியல் பாலாஜி, கிஷோர், இயக்குநர்கள் சமுத்திரக்கனி, அமீர், சுப்ரமண்யம் சிவா ஆகியோர் மிக முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வரும் இதப்படத்திற்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். கேங்க்ஸ்டர் த்ரில்லரான இப்படத்தினை வெற்றிமாறனின் ‘கிராஸ் ரூட் ஃபிலிம் கம்பெனி’யுடன் இணைந்து தனுஷ் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘வுண்டர்பார் ஃபிலிம்ஸ்’ நிறுவனத்தின் மூலம் தயாரிக்கிறார்.

தற்போது, இதன் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்னும் 3 வாரங்களுடன் மொத்த படப்பிடிப்பும் நிறைவடைகிறது.

வெகு விரைவில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீஸர் வெளியீடு குறித்த தகவல் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது..

Calendar

« December 2017 »
Mon Tue Wed Thu Fri Sat Sun
        1 2 3
4 5 6 7 8 9 10
11 12 13 14 15 16 17
18 19 20 21 22 23 24
25 26 27 28 29 30 31
Go to top