மணிரத்னம் படத்தில் சிம்பு

மணிரத்னம் படத்தில் சிம்பு

கார்த்தியன் ‘காற்று வெளியிடை’ படத்திற்கு பிறகு இயக்குநர் மணிரத்னம் இயக்கவிருக்கும் புதிய படத்தில், சிம்பு, விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி, பகத் பாஸில், ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் நடிக்கவுள்ளனர்.

சிம்பு, அரவிந்த் சாமி, பகத் பாஸில் ஆகிய மூவருக்கும் அப்பா – அம்மாவாக பிரகாஷ் ராஜ் மற்றும் ஜெயசுதா நடிக்கவுள்ளனர்.விஜய் சேதுபதி போலீஸாக கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தை இயக்குநர் மணிரத்னம தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘மெட்ராஸ் டாக்கீஸ்’ மூலம் தயாரிக்கவுள்ளார்.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கவுள்ள இப்படத்திற்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்யவுள்ளார், ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பாளராக பணியாற்றவுள்ளார். இதன் ப்ரீபுரொடக்ஷன் பணிகள் பரபரப்பாக நடைபெற்றுகின்றது.

சமீபத்தில், ஏ.ஆர்.ரஹ்மான் படத்தின் பாடல்களின் இசையமைப்ப பணியை கோவாவில் துவங்கினார். படத்தில் மொத்தம் 6 பாடல்கள் உள்ளது. அனைத்து பாடல்களையும் கவிப்பேரரசு வைரமுத்து எழுதி வருகிறாராம். தற்போது, படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு வருகிற ஜனவரி 20ஆம் திகதி முதல் ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த படப்பிடிப்பில் நடிகர் சிம்புவும் கலந்து கொள்வுள்ளாராம். விரைவில் படத்தின் தலைப்பு அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Calendar

« December 2017 »
Mon Tue Wed Thu Fri Sat Sun
        1 2 3
4 5 6 7 8 9 10
11 12 13 14 15 16 17
18 19 20 21 22 23 24
25 26 27 28 29 30 31
Go to top