2.0 படத்துக்கு எதிர்ப்பு

2.0 படத்துக்கு எதிர்ப்பு

ஷங்கர் இயக்கத்தில், ரஜினி நடிக்கும் '2.0' படம், ஜனவரி 26ஆம் திகதி வெளியாவதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையில், திட்டமிட்டபடி ஜனவரியில் படம் வெளியாகாது. ஏப்ரலில் வெளியாகும் என்று '2.0' இசை வெளியீட்டு விழா முடிந்த பிறகு செய்திகள் வெளியாகின.

இந்த செய்தியை தயாரிப்பு நிறுவனம் மறுத்து வந்தது.

2.0 படத்தில் வில்லனாக நடிக்கும் பாலிவுட் நடிகரான அக்ஷய்குமாருடைய நடிப்பில் பாலிவுட்டில் உருவாகியிருக்கும் 'பேட்மேன்' படம் ஜனவரி 26ல் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

அதன்பின்னரே 2.0 படம் ஜனவரியில் வெளியிடுவதில் சிக்கல் இருப்பது தெரிய வந்தது.

வேறுவழியில்லாமல் 2.0 திரைப்படத்தின்  வெளியீடானது ஏப்ரலுக்கு மாற்றியிருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவித்தது லைகா புரொடக்ஷன் நிறுவனம்.

இந்நிலையல் ஏப்ரல் மாதம் 2.0 படத்தை வெளியிட தெலுங்கு பட தயாரிப்பாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

அந்த திகதிகளில் நேரடி தெலுங்குப்படங்களை வெளியிட திட்டமிட்டுள்ளதால் 2.0 படத்தை வெளியிடக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

Calendar

« December 2017 »
Mon Tue Wed Thu Fri Sat Sun
        1 2 3
4 5 6 7 8 9 10
11 12 13 14 15 16 17
18 19 20 21 22 23 24
25 26 27 28 29 30 31
Go to top