'தளபதி 62' அதிகாரப்பூர்வ அறிவிப்பு

'தளபதி 62' அதிகாரப்பூர்வ அறிவிப்பு

பரதனின் ‘பைரவா’ படத்திற்கு  பிறகு ‘தளபதி’ விஜய் நடித்து தீபாவளிக்கு வெளியான  படம் ‘மெர்சல்.  அட்லி  இயக்கியிருந்த இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் விஜய் நடிக்கவுள்ளார். இவர்களது கூட்டணியில் வெளியான ‘துப்பாக்கி, கத்தி’ ஆகிய 2 படங்களுமே மெகா ஹிட்டானது குறிப்பிடத்தக்கது.

தற்போது, விஜய்யின் 62வது படமான இப்படத்தினை ‘சன் பிக்சர்ஸ்’ நிறுவனம் தயாரிக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக தகவல் வெளியாகியுள்ளது. இதை ‘சன் டிவி’யே தங்களது  டிவிட்டர்  பக்கத்தில்  உறுதிபடுத்தியுள்ளது.

 

DQR3LWYUQAAxj1K - Copy.jpg

 

இப்படத்தில் காமெடியில் கலக்க யோகி பாபு நடிக்கவிருக்கிறார். ‘சோலோ’ புகழ் கிரீஸ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்யவுள்ள இதற்கு ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பாளராகவும், டி.சந்தானம் கலை இயக்குநராகவும் பணியாற்றவுள்ளனர். இதன்  ப்ரீபுரொடக்ஷன்  பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. படப்பிடிப்பை ஜனவரி மாதம் ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளார்கள்.

Calendar

« December 2017 »
Mon Tue Wed Thu Fri Sat Sun
        1 2 3
4 5 6 7 8 9 10
11 12 13 14 15 16 17
18 19 20 21 22 23 24
25 26 27 28 29 30 31
Go to top