மீண்டும் படப்பிடிப்பில் தமிழ்படம்

மீண்டும் படப்பிடிப்பில் தமிழ்படம்

2010ம் ஆண்டு வெளிவந்து பரபரப்பு கிளப்பிய படம் தமிழ்படம். தமிழ் சினிமாவையும், முன்னணி நடிகர்களையும் கிண்டல் செய்து எடுக்கப்பட்ட இந்த படம் வெற்றி பெற்றதோடு நல்ல வசூலையும் கொடுத்தது.

அறிமுக இயக்குனர் அமுதன் இயக்கிய இந்தப் படத்தில் சிவா, திஷா பாண்டே, எம்.எஸ்.பாஸ்கர் உள்பட பலர் நடித்திருந்தார்கள். ஒய்நாட் சசி தயாரித்திருந்தார்.
இந்தப் படத்தை இயக்கிய சி.எஸ்.அமுதன் அதன்பிறகு ரெண்டாவது படம் என்ற படத்தை இயக்கினார் அது வெளியாவில்லை.

இந்நிலையில் தமிழ் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க இருக்கிறார். சிவா நடிக்க உள்ள இப்படத்தை முதல் பாகத்தை தயாரித்த சசி இதையும் தயாரிக்கிறார். ஹீரோயினாக ஐஸ்வர்யா மேனன் நடிக்கஉள்ளார். எதிர்வரும் 11ந் திகதி முதல் படப்பிடிப்பு தொடவுள்ளது.

Calendar

« December 2017 »
Mon Tue Wed Thu Fri Sat Sun
        1 2 3
4 5 6 7 8 9 10
11 12 13 14 15 16 17
18 19 20 21 22 23 24
25 26 27 28 29 30 31
Go to top