ஜனாதிபதியின் டோஸ்...

ஜனாதிபதியின் டோஸ்...

பெற்றோலிய தட்டுப்பாடு குறித்து கடும் அதிருப்தியடைந்துள்ள ஜனாதிபதி அந்தத் துறைக்குப் பொறுப்பான அமைச்சரை நேரடியாக அழைத்து வறுத்தெடுத்ததாகக் கேள்வி.

"நூற்றுக்கு இருபது வீத பங்குகளைக் கொண்டுள்ள ஐ.ஓ.சி. நிறுவனம் இலங்கையை ஆட்டுவிப்பதாக என்னிடம் கதை சொல்ல வேண்டாம்... உங்களிடம் சரியான திட்டங்கள் இல்லை... திட்டங்கள் இருந்திருந்தால் இப்படி நடந்திருக்காது'' என்று கூறியதுடன் நிற்காத ஜனாதிபதி, பிரச்சினைகளைத் தீர்க்கமுடியாத பட்சத்தில் பொறுப்புகளை வகிப்பதில் அர்த்தமில்லை என்றும் கூறினாராம்...

எது எப்படியோ அமைச்சர் அர்ஜுன ரணதுங்க இந்த பெற்றோல் தட்டுப்பாடு குறித்து எதிர்க்கட்சி எம்.பி.விமல் வீரவன்சவுடன் தொலைபேசியில் பேசிய விவகாரமும் ஜனாதிபதியின் காதுகளுக்கு சென்றுள்ளதாம்.

Latest News

Calendar

« February 2018 »
Mon Tue Wed Thu Fri Sat Sun
      1 2 3 4
5 6 7 8 9 10 11
12 13 14 15 16 17 18
19 20 21 22 23 24 25
26 27 28        
Go to top