மைத்திரி மீது பாய்ந்த ரணில்

மைத்திரி மீது பாய்ந்த ரணில்

ஜனாதிபதி மைத்திரியை பிரதமர் ரணில் நேற்றுமுன்னிரவில் சந்தித்து பேசினார் அல்லவா? அப்போது புதிய பிரதமர் ஒருவரை நியமிப்பது பற்றிய பேச்சு எழுந்ததாம்.

யாரை நியமிக்கலாமென பிரதமர் ரணில் யோசிக்க ஆரம்பிக்கும்போதே உடனடியாக மூன்று பேரின் பெயர்களை சிபாரிசு செய்தாராம் ஜனாதிபதி. சபாநாயகர் கரு ஜயசூரிய, அமைச்சர்களான மங்கள சமரவீர, சஜித் பிரேமதாஸ ஆகியோரின் பெயர்களே ஜனாதிபதியினால் சிபாரிசு செய்யப்பட்டனவாம்.

ஜனாதிபதி அதிரடியாக இப்படி பெயர்களை சிபாரிசு செய்ததைக் கண்டு கடுப்பாகிய பிரதமர் பொறுமையை மீறி, ""என்னை மாற்றுமாறு எனது கட்சியில் யாராவது உங்களைக் கோரினார்களா? அப்படியாயின் அனைவரை யும் கூட்டி வருகிறேன். என் முன்னால் கேளுங்கள்'' என்று எகிறினாராம்.

நல்லாட்சி அமைந்த பின்னர் முதன்முதலில் இப்படி ஜனாதிபதி மீது ரணில் கோபப்பட்டதாக இந்தச் சந்திப்பின் போது பக்கத்தில் இருந்த அமைச்சர் ஒருவர் சொல்லி ஆச்சரியப்பட்டார்...

Latest News

Calendar

« February 2018 »
Mon Tue Wed Thu Fri Sat Sun
      1 2 3 4
5 6 7 8 9 10 11
12 13 14 15 16 17 18
19 20 21 22 23 24 25
26 27 28        
Go to top