20 ஆயிரம் மெற்றிக்தொன் அரிசி சந்தைக்கு

20 ஆயிரம் மெற்றிக்தொன் அரிசி சந்தைக்கு

இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட 20,000 மெற்றிக் தொன் நாட்டரிசி சந்தைக்கு விநியோகிக்கப்படுவதாக வர்த்தக மற்றும் கைத்தொழில் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

தற்சமயம் சதொஸ விற்பனை நிலையங்கள் மற்றும் கூட்டுறவு மொத்த விற்பனை கூட்டுத்தாபனம் என்பனவற்றின் ஊடாக இறக்குமதி செய்யப்பட்ட 136 கோடி ரூபா பெறுமதியான அரிசி சந்தைக்கு விற்பனை செய்யப்படுவதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

ஒரு கிலோ நாட்டரிசி 74 ரூபாவுக்கும், ஒரு கிலோ சம்பா அரிசி 78 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படுகின்றது.

டிசம்பர் பண்டிகைக் காலத்தை கருத்திற்கொண்டு 50,000 மெற்றிக் தொன் நாட்டரிசியும், 30,000 மெற்றிக் தொன் சம்பா அரிசியும் இறக்குமதி செய்யப்படும் .

இதனால், சந்தையில் எந்த விதத்திலும் அரிசி தட்டுப்பாடு ஏற்பட மாட்டாது என்றும் அமைச்சர் நம்பிக்கை வெளியிட்டார்.

Calendar

« November 2017 »
Mon Tue Wed Thu Fri Sat Sun
    1 2 3 4 5
6 7 8 9 10 11 12
13 14 15 16 17 18 19
20 21 22 23 24 25 26
27 28 29 30      
Go to top