திருகோணமலை துறைமுகத்தை அபிவிருத்தி செய்யத் திட்டம்

திருகோணமலை துறைமுகத்தை அபிவிருத்தி செய்யத் திட்டம்

திருகோணமலை துறைமுகத்தை சுற்றுலாத்துறையுடன் தொடர்புபடுத்த முடியுமாயின் சுற்றுலாத் துறையை மேம்படத்த முடியும் என்று துறைமுகங்கள் மற்றும் கப்பல் துறை அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார்.

திருகோணமலைத் துறைமுகத்தை அபிவிருத்தி செய்ய பாரிய திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் கூறினார்.

வரவு செலவுத்திட்டத்தின் துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து, கைத்தொழில் மற்றும் தொழிற்சங்க உறவுகள், அபிவிருத்தி போன்ற அமைச்சுக்களுக்கான நிதி ஒதுக்கீடு மீதான குழுநிலைவிவாதம் இன்று பாராளுமன்றத்தில் இடம்பெற்றது.

இதில் பங்கேற்று உரையாற்றுகையிலேயே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். “அமைச்சர் தொடர்ந்து உரையாற்றுகையில் “கடந்த காலத்தில் துறைமுகம் சார்ந்த துறைகளில் பாரிய வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. ஹம்பாந்தோட்டை துறைமுக ஒப்பந்தத்தை இலங்கைக்கு சாதகமாக மாற்றியமைக்க முடிந்துள்ளது.

இந்த ஒப்பந்தம் பற்றி பாராளுமன்றத்தில் எந்த நேரத்திலும் விவாதிக்கத் தயார். கப்பல் போக்குவரத்து தொடர்பான தேசிய செயற்றிட்டமும் தயாரிக்கப்படவிருக்கிறது. இலங்கை துறைமுக அதிகாரசபை இந்த ஆண்டில் 110 கோடி ரூபாவை இலாபமாக ஈட்டியுள்ளது.

உள்ளுர் வர்த்தகர்களை வீட்டுக்கு அனுப்பத்தயார் இல்லை ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்தி கலந்துரையாடியுள்ளோம். திறக்கப்பட்ட பின்னர் முதலீடு வருகின்றதா என்பதை அவதானிக்க முடியும்“ என அமைச்சர் தெரிவித்தார்.

Calendar

« December 2017 »
Mon Tue Wed Thu Fri Sat Sun
        1 2 3
4 5 6 7 8 9 10
11 12 13 14 15 16 17
18 19 20 21 22 23 24
25 26 27 28 29 30 31
Go to top