காங்கேசன்துறை துறைமுகத்தை அபிவிருத்தி செய்ய இந்தியா கடனுதவி

காங்கேசன்துறை துறைமுகத்தை அபிவிருத்தி செய்ய இந்தியா கடனுதவி

காங்கேசன்துறை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்கு, 6.9 பில்லியன் ரூபா கடன் உதவியை இந்தியா வழங்கவுள்ளது. இதற்கான உடன்பாட்டில் இந்தியாவும் இலங்கையும் நேற்று கையெழுத்திட்டுள்ளன.

புதுடெல்லியில் நடந்த நிகழ்வில், நிதி அமைச்சின் செயலாளர் கலாநிதி சமரதுங்கவும், இந்தியாவின் எக்சிம் வங்கியின் முகாமைத்துவப் பணிப்பாளர் டேவிட் ரஸ்க்குயின்ஹாவும் இந்த உடன்பாட்டில் கையெழுத்திட்டனர்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச 2010ஆம் ஆண்டு இந்தியாவுக்கு மேற்கொண்டிருந்த விஜயத்தின்போது, காங்கேசன்துறை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்கு உதவி வழங்க இந்தியா இணங்கியிருந்தது.

இதையடுத்து, 2011 ஜூலையில் இதுதொடர்பான புரிந்துணர்வு உடன்பாடு இரண்டு நாடுகளுக்கும் இடையில் கையெழுத்திடப்பட்டது.

இந்த நிலையில், காங்கேசன்துறை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்கு இந்தியாவின் எக்சிம் வங்கியிடம் இருந்து 6.9 பில்லியன் கடனுதவியைப் பெற்றுக் கொள்வதற்கு அமைச்சரவை கடந்த ஆண்டு மே மாதம் அனுமதி அளித்தது.

இதனடிப்படையிலேயே, நேற்று இரண்டு நாடுகளின் அதிகாரிகளுக்கும் இடையில் இந்த உடன்பாடு கையெழுத்திடப்பட்டுள்ளது.

Calendar

« January 2018 »
Mon Tue Wed Thu Fri Sat Sun
1 2 3 4 5 6 7
8 9 10 11 12 13 14
15 16 17 18 19 20 21
22 23 24 25 26 27 28
29 30 31        
Go to top