இணையதளத்தினூடாக ஏற்றுமதி இறக்குமதிக்கான அனுமதிப்பத்திரம்

இணையதளத்தினூடாக ஏற்றுமதி  இறக்குமதிக்கான அனுமதிப்பத்திரம்

தேசிய உள்ளூர் மற்றும் வர்த்தக நடவடிக்கைகளுக்கான ஆவணங்களில் முக்கிய இடம்பெறும் ஏற்றுமதி இறக்குமதிக்கான அனுமதிப்பத்திரத்தை இணையதளத்தினுடாக பெற்றுகொள்ள வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

அபிவிருத்தி மூலோபாய மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சும் இலங்கை தகவல்தொழில்நுட்ப தொடர்பாடல் முகவர் நிலையமும் இணைந்து இதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன.

இதற்கமைவாக www.imexport.gov.lk என்ற இணையத்தில் இது தொடர்பான தகவல்களைப் பெற்றுகொள்ளமுடியும்.

ஏற்றுமதி இறக்குமதிக்கான அனுமதிப்பத்திரத்தை பெற்றுகொள்வதற்கான விண்ணப்பத்தை இந்த இணையத்தளத்தில் பிரவேசித்து அதனைப் பெற்று பூரணப்படுத்திய பின்னர் அதனுடாக ஏற்றுமதி மற்றும் இறக்குமதி கட்டுப்பாட்டு திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கும் வசதிகளும் இதில் செய்யப்பட்டுள்ளன.

ஏற்றுமதி மற்றும் இறக்குமதி அனுமதிப்பத்திரத்தை விநியோகிப்பதற்காக 23 நிறுவனங்கள் குறித்த தேவையான தகவல் சிபாரிசு மற்றும் அங்கீகரிப்பதற்கான விண்ணப்பமும் இந்த கட்டமைப்பின் மூலம் நேரடியாக சமர்ப்பிக்ககூடிய வகையில் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

இதன் கீழ் அனுமதிப்பத்திரத்திற்கு விண்ணப்பிப்போருக்கு செயற்திறனுடனான சேவையை பெற்றுக்கொடுக்கப்படும் என்று இலங்கை தகவல்தொழிநுட்ப தொடர்பாடல் முகவர் நிலையம் தெரிவித்துள்ளது.

Latest News

Calendar

« February 2018 »
Mon Tue Wed Thu Fri Sat Sun
      1 2 3 4
5 6 7 8 9 10 11
12 13 14 15 16 17 18
19 20 21 22 23 24 25
26 27 28        
Go to top