ரஜினியுடன் இணையும் ராகவா லாரன்ஸ்

ரஜினியுடன் இணையும் ராகவா லாரன்ஸ்

ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது உறுதியாகிவிட்டது. பொங்கல் பண்டிகை அல்லது தமிழ் புத்தாண்டு தினத்தில் கட்சி பெயர், கொடி, சின்னம், கொள்கை, செயல்திட்டம் ஆகியவற்றை அறிவிக்க இருக்கிறார். தமிழ்நாடு முழுவதும் சுற்றுப் பயணம் செய்து மக்களையும் சந்திக்க இருக்கிறார்.

ரஜினி அரசியல் வருகை குறித்து அரசியல் கட்சிகள் தான் கருத்து சொல்லி வருகின்றன. ஒரு சில நடிகர்கள் தவிர்த்து மற்றவர்கள் மவுனம் சாதிக்கிறார்கள். ரஜினியை ஆஹா ஓஹோ என்றவர்கள் வாய் திறக்கவில்லை. இந்த நிலையில் நடிகர் ராகவா லாரன்ஸ் ரஜினி கட்சியில் முதல் ஆளாக இணைய உள்ளார்.

"ரஜினியின் காவலன் நான்" என்று அறிவித்திருக்கின்றார். நாளை மாலை 4 மணிக்கு அம்பத்தூரில் தன் தாய்க்கு கட்டியிருக்கும் கோவிலுக்கு பூஜை செய்து விட்டு இதனை முறைப்படி பத்திரிகையாளர்களை அழைத்து அறிவிக்க இருக்கிறார். இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

Calendar

« January 2018 »
Mon Tue Wed Thu Fri Sat Sun
1 2 3 4 5 6 7
8 9 10 11 12 13 14
15 16 17 18 19 20 21
22 23 24 25 26 27 28
29 30 31        
Go to top