நாளை மறுதினம் ரஜினி பங்கேற்கும் முக்கிய நிகழ்வு

நாளை மறுதினம் ரஜினி பங்கேற்கும் முக்கிய நிகழ்வு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த 31ஆம் திகதி அரசியலுக்கு வருவது உறுதி என்று தெரிவித்ததோடு அதற்கான பணிகளையும் தொடங்கிவிட்டார். விரைவில் அவரது கட்சியின் பெயர், சின்னம், கொடி மற்றும் கொள்கைகள் அறிவிக்கப்படவுள்ளன.

இந்நிலையில் ஆன்மீக அரசியலை அறிவித்த ரஜினிகாந்த் ஏற்கனவே '2.0' மற்றும் 'காலா' ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார். இதில் 2.0' திரைப்படம் வரும் ஏப்ரலில் வெளியாகவுள்ளது.

நாளை மறுதினம் மலேசியாவில் நடைபெறவுள்ள நட்சத்திர கலைவிழாவின்போது ரஜினியின் '2.0' படத்தின் டீசர் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி இந்த விழாவில் ரஜினிகாந்த் கலந்து கொள்ளவிருப்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஏற்கனவே இதே விழாவின்போது விஷாலின் 'இரும்புத்திரை' டிரைலர் மற்றும் சண்டக்கோழி 2' படத்தின் டீசர் வெளியாகவுள்ளது என்பதும், விஜய்சேதுபதியின் 'ஒரு நல்ல நாள் பாத்து சொல்லு' படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

Calendar

« January 2018 »
Mon Tue Wed Thu Fri Sat Sun
1 2 3 4 5 6 7
8 9 10 11 12 13 14
15 16 17 18 19 20 21
22 23 24 25 26 27 28
29 30 31        
Go to top