தமிழகத்துக்கு நல்ல தலைவன் கிடைக்க வேண்டுகிறேன்; ஏ.ஆர்.ரஹ்மான்

தமிழகத்துக்கு நல்ல தலைவன் கிடைக்க வேண்டுகிறேன்; ஏ.ஆர்.ரஹ்மான்

ஏ.ஆர்.ரஹ்மானின், 25 ஆண்டு கால இசைப்பயணத்தை முன்னிட்டு, அவருடன் இணைந்து, தமிழகத்தில் இருந்து, ஏழு புதிய குரல் தேடல் என்ற, நிகழ்ச்சியை, 7up நிறுவனம் நடத்துகின்றது. பலகட்ட போட்டிகளுக்குப் பின், தேர்வான ஏழு பேருடன், வரும், 12ஆம் திகதி, சென்னையில் நடைபெறும் இசை நிகழ்ச்சியில், ஏ.ஆர்.ரஹ்மான் பாட உள்ளார்.

இதுகுறித்தும், தற்போதைய தமிழக அரசியல் குறித்தும், ஏ.ஆர்.ரஹ்மான் கருத்து தெரிவிக்கையில்:

இசை பயணத்தில், 25 ஆண்டுகளை முடித்து விட்டோமா என, திரும்பி பார்த்தால், வயதானது போலாகி விடும். இனிமேல் தான், நிறைய செய்ய வேண்டியுள்ளது. சென்னையில், இசை நிகழ்ச்சி நடத்துவது சந்தோஷமாக உள்ளது. எதிர்வரும், 12இல், 99 சதவீதம் தமிழ் பாடல்களையே, மூன்று மணி நேரம் பாடப்போகின்றோம்.

எதிர்கால தலைமுறையினருக்கு, யூ -டியூப் போன்ற தளங்கள் பயனுள்ளதாக உள்ளன. நான் கூட, சில சமயம் அதிலிருந்து தான், நல்ல குரல்களை தேடுகிறேன். இந்த இசை நிகழ்ச்சியால் கிடைக்கும் நிதி விவசாயிகளுக்கும், கல்விக்கும் பயன்பட உள்ளது. நான் தனிமை விரும்பி என்பதால், அரசியலில் நாட்டமில்லை. ரஜினியின் அரசியல் வருகை குறித்த பேச்சை நானும் கேட்டேன்; நன்றாக இருந்தது.

தமிழகத்திற்கு நல்ல தலைவன் கிடைக்க வேண்டும் என, எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். இசைக்கு காப்புரிமை கோருவது போன்ற விஷயங்களில், நான் கவனம் செலுத்துவதில்லை. அதற்கென உள்ளோர், அதை பார்த்துக் கொள்வர். இவ்வாறு அவர் கூறினார்.

Calendar

« January 2018 »
Mon Tue Wed Thu Fri Sat Sun
1 2 3 4 5 6 7
8 9 10 11 12 13 14
15 16 17 18 19 20 21
22 23 24 25 26 27 28
29 30 31        
Go to top