மீண்டும் “மெரீனா புரட்சி”

மீண்டும் “மெரீனா புரட்சி”

மெரினா, கேடி பில்லா கில்லாடி ரங்கா, பசங்க உட்பட பல படங்களை தயாரித்த இயக்குநர் பாண்டிராஜ், தனது பசங்க புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் புதிய படத்தை தயாரித்திருப்பதாக அறிவித்திருக்கிறார்.

எம்.எஸ்.ராஜ் என்பவர் எழுதி இயக்கும் இந்தப் படத்திற்கு “மெரினா புரட்சி“ என்று தலைப்பு வைத்துள்ளனர். தலைப்புக்கு ஏற்ப இந்த படம் கடந்த ஆண்டு சென்னையில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டம் மற்றும் ஜல்லிக்கட்டை மையப்படுத்திய படமாக உருவாகவுள்ளது.

இந்தப்படத்தின் முதல்பார்வை(firstlook) போஸ்டரில் இடம் பெற்றுள்ள கலாசாரத்தை காப்பாற்ற ஒரு போராட்டம் என்ற உபதலைப்பு இதை உறுதிப்படுத்துகின்றது.

இந்த படத்தின் நடிகர்கள் குறித்த தகவலைகளை வெளியிடவில்லை. வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்ய உள்ளார், அல்ரூபியான் இசை அமைக்கின்றார், படத்தொகுப்பு தீபக் என்பது போன்ற தகவல்கள் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது.

இதன்  முதல் பார்வை (firstlook) போஸ்டரை  சிவகார்த்திகேயன், சதீஷ், சூரி தங்களது டிவிட்டர் பக்கங்களில் வெளியிட்டுள்ளனர்

Calendar

« January 2018 »
Mon Tue Wed Thu Fri Sat Sun
1 2 3 4 5 6 7
8 9 10 11 12 13 14
15 16 17 18 19 20 21
22 23 24 25 26 27 28
29 30 31        
Go to top