ரசிகர்கள் காலில் விழுந்த சூர்யா

ரசிகர்கள் காலில் விழுந்த  சூர்யா

‘சி 3’ படத்தின் வெற்றிக்கு பிறகு சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘தானா சேர்ந்த கூட்டம்’. விக்னேஷ் சிவன் இயக்கியுள்ள இதில் சூர்யாவுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் டூயட் பாடி ஆடியுள்ளார்.

அனிருத் இசையமைத்துள்ள இதற்கு தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார், ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். ‘ஸ்டுடியோ கிரீன்’ நிறுவனம் சார்பில் கே.ஈ.ஞானவேல்ராஜா தயாரித்துள்ளார்.

படத்தை தமிழ் மற்றும் தெலுங்கில் (கேங்) நாளை (ஜனவரி 12ஆம் திகதி) பொங்கல் சிறப்பாக வெளியிடத் திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில், படத்தின் விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சி நேற்று (ஜனவரி 10ஆம் திகதி) மாலை சென்னையிலுள்ள கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ‘மேடையில் சூர்யாவுடன் ‘சொடக்கு’ பாடலுக்கு நடனமாட சில ரசிகர்களை தொகுப்பாளினி அஞ்சனா அழைத்தார். மேடை ஏறிய ரசிகர்கள் சூர்யாவின் காலில் விழுந்தனர். இதனையடுத்து சூர்யாவும் அவர்கள் காலில் விழுந்து ரசிகர்களை நெகிழ்ச்சியடைய செய்துள்ளார்.

Calendar

« January 2018 »
Mon Tue Wed Thu Fri Sat Sun
1 2 3 4 5 6 7
8 9 10 11 12 13 14
15 16 17 18 19 20 21
22 23 24 25 26 27 28
29 30 31        
Go to top