மீண்டும் தயாராகும் “இண்டியான ஜோன்ஸ்”

மீண்டும் தயாராகும் “இண்டியான ஜோன்ஸ்”

ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் இயக்கிய படங்களில் புகழ்பெற்ற அட்வென்சர் தொடர் “இண்டியான ஜோன்ஸ்”. இதன் முந்தைய நான்கு பாகங்களும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றது. முந்தைய பாகமான “இண்டியானா ஜோன்ஸ் அண்ட் த கிங்டம் ஆப் த க்ரிஸ்டல் ஸ்கல்” பத்து வருடங்களுக்கு முன்பு வெளியானது. இப்போது அதன் அடுத்த பாகம் பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

“இண்டியான ஜோன்ஸ்” படத்தின் ஐந்தாம் பாகப் படப்பிடிப்பை அடுத்த வருடம் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் ஆரம்பிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது அவர் இயக்கப் போகும் ரீமேக் படமான சூவெஸ்ட் சைட் ஸ்டோரி' படத்திற்குப் பிறகு “இண்டியான ஜோன்ஸ்” படப்பிடிப்பு துவங்கும் என சொல்லப்படுகிறது. 2020இல் இந்தப் படத்தை வெளியிடத் திட்டமிட்டுள்ளனர்.

இதற்கு முன் ஸ்பீபெர்க் இயக்கத்தில் வெளியான “சூத போஸ்ட்” படம் நல்ல வரவேற்பைப் பெற்றிறுள்ளது. மார்ச் மாதம் அடுத்த படமான சூப்ளேயர் ஒன்' வெளிவரவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Latest News

Calendar

« February 2018 »
Mon Tue Wed Thu Fri Sat Sun
      1 2 3 4
5 6 7 8 9 10 11
12 13 14 15 16 17 18
19 20 21 22 23 24 25
26 27 28        
Go to top