கண் இமையால் கலக்கிய நடிகை

கண் இமையால் கலக்கிய நடிகை

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஜிமிக்கி கம்மல் பாடலுக்கு நடனம் ஆடிய ஷெரில் சமூக வலைத்தளங்களில் பல நாட்கள் டிரெண்டில் இருந்தார் என்பது அனைவரும் அறிந்ததே. அந்த அளவுக்கு அவருடைய நடனம் அனைத்து தரப்பினர்களையும் ஈர்த்தது

இந்த நிலையில் புருவத்தில் மட்டும் நடன அசைவுகளை வெளிப்படுத்தி ஒரே இரவில் ஒரு நடிகை உலகப்புகழ் பெற்றுள்ளார். ப்ரியா பிரகாஷ் என்ற நடிகை நடித்த 'Oruadaarlove' என்ற மலையாள படத்தின் டீசர் சமீபத்தில் வெளிவந்தது. இந்த டீசரில் ப்ரியா பிரகாஷ் பள்ளி சீருடை அணிந்து சக மாணவர் ஒருவரை பார்த்து கண்ணசைத்தும், புருவ டான்ஸ் ஆடியும் உள்ள காட்சிகள் இளைஞர்களிடையே பிரபலமடைந்து வருகிறது.

இந்த டீசர் வெளியான ஒரே இரவில் சமூக வலைத்தளங்களில் உலக அளவில் டிரெண்ட் ஆகியுள்ளது. இந்த மாபெரும் வரவேற்பை சற்றும் எதிர்பார்க்காத ப்ரியா பிரகாஷ், தனது சமூக வலைத்தளத்தில் நன்றி தெரிவித்துள்ளார். 'Oruadaarlove' படத்தின் டீசருக்கு 4.3 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்கள் கிடைத்துள்ளது. இந்த ஆதரவிற்கு நன்றி என்று தெரிவித்துள்ளார். மேலும், இதே ஆதரவை படத்திற்கும் ரசிகர்கள் வழங்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

 

Latest News

Calendar

« February 2018 »
Mon Tue Wed Thu Fri Sat Sun
      1 2 3 4
5 6 7 8 9 10 11
12 13 14 15 16 17 18
19 20 21 22 23 24 25
26 27 28        
Go to top