Items filtered by date: Sunday, 14 January 2018

இம்முறை இடம்பெறவுள்ள IPL போட்டிகளுக்கான வீரர்களை தெரிவு செய்யும் ஏலத்தில் 1122 வீரர்கள் தமது பெயர்களை பதிவு செய்துள்ளனர்.

10 வது முறையாக இடம்பெறவுள்ள IPL போட்டியில் 2 வருடங்களுக்கு தடைவிதிக்கப்பட்டிருந்த ராஜஸ்தான் ரோயல்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தடைநீங்கப்பெற்று மீண்டும் களமிறங்கவுள்ளது.

இந்நிலையில், IPL போட்டிகளுக்கான வீரர்களை தெரிவு செய்யும் ஏலத்திற்கு லசித் மலிங்க, எஞ்சலோ மெத்யூஸ், நிரோஷன் டிக்வெல்ல மற்றும் திசர பெரேரா உள்ளிட்ட 39 இலங்கை வீரர்கள் தமது பெயர்களை பதிவுசெய்துள்ளனர்.

IPL போட்டிகளுக்கான வீரர்களை தெரிவு செய்யும் ஏலம் இம்மாதம் 27 ஆம் மற்றும் 28 ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

புவனேஷ்வர் குமாரை காரணமின்றி அணியிலிருந்து நீக்கிய இந்திய அணித் தலைவர் விராட் கோலி இந்த டெஸ்ட் போட்டியில் ஓட்டங்கள் பெறவில்லையெனில் அடுத்த டெஸ்ட் போட்டிக்குத் தன்னைத்தானே நீக்கிக் கொள்வதே சரியானது என்று விரேந்திர சேவாக் அதிரடி கருத்து தெரிவித்துள்ளார்.

ஷிகர் தவண் ஒரு போட்டியில் தோல்வியடைந்ததற்காகவும், காரணமில்லாமல் புவனேஷ்வர் குமாரையும் கோலி நீக்கியதைப் பார்க்கும் போது செஞ்சூரியன் டெஸ்ட் போட்டியில் கோலி ஓட்டங்களைப் பெறத் தவரினால் ஜோஹான்னஸ்பர்க் டெஸ்ட் போட்டியில் தன்னைத்தானே நீக்கிக் கொள்ள வேண்டும்.

இஷாந்த் சர்மாவை வேறு எந்த பந்துவீசாளருக்குப் பதிலாகவும் சேர்த்திருக்கலாம், புவனேஷ்வர் குமார் கேப்டவுனில் அபாரமாக ஆடினார். அவரை உட்கார வைப்பது எந்த விதத்திலும் நியாயப்படுத்த முடியாத ஒரு செயல் என தனது எதிர்ப்பினை வெளியிட்டுள்ளார்.

வடகொரியா இதுவரை 6 முறை அணு ஆயுத சோதனை நடத்தியுள்ளது. இந்த சோதனைகள் அனைத்தும் அந்த நாட்டின் மேன்டப் மலைப்பகுதியில் நடந்துள்ளது.

இந்நிலையில் புதிதாக அணு ஆயுத சோதனை நடத்த மேன்டப் மலையின் புங்கி-ரி பகுதியில் புதிதாக சுரங்கம் தோண்டப்படுகிறது என்று அமெரிக்காவின் வாஷிங்டனை சேர்ந்த ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதற்கு ஆதாரமாக செயற்கைக்கோள் புகைப்படங்களையும் அந்த அமைப்பு வெளியிட்டுள்ளது.

இதனிடையே அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் அளித்த பேட்டியில், ‘‘வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னுடனும் நல்ல உறவு முறையில் இருக்கிறேன். நான் கிம்முடன் பேசினேனா, இல்லையா என்பது குறித்து எதுவும் கூற முடியாது’’ என்று தெரிவித்தார்.

கடந்த சில மாதங்களாக ட்ரம்பும் வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன்னும் கடும் சொற்களால் பரஸ்பரம் விமர்சித்து வந்தனர். இதில் திடீர் திருப்பமாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப், வடகொரியாவுடன் பேச்சுவார்த்தைக்கு தயார் என்று அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

ஈரான்னுடன் அணுசக்தி ஒப்பந்தத்தில் மாற்றம் கொண்டு வரும் ட்ரம்ப்பின் யோசனையை அந்நாடு நிராகரித்துள்ளது.

இதுகுறித்து ஈரான், "டொனால்ட் ட்ரம்ப் கூறுவது போல் 2015 இல் உலக வல்லரசுகளுடன் மேற்கொண்ட ஒப்பந்தத்த எந்த மாற்றத்தையும் ஏற்று கொள்ள மாட்டோம்"என்று கூறியுள்ளது.
மேலும் ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர், "ஈரான் அந்த ஒப்பந்தத்தில் எந்த மாற்றத்தையும் ஏற்றுக் கொள்ளாது எதிர்காலத்திலும் இதுதான் எங்கள் முடிவு" என கூறியுள்ளார்.

அணுசக்தி ஒப்பந்தத்தை மீறிய ஈரான் மீது பொருளாதார தடைகள் விதிக்கப்படும் இல்லையேல் 2015 இல் அந்நாட்டுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தில் மாற்றம் கொண்டு வரப்படும் என்று கூறியிருந்தார்.

கடந்த 2015 ஆம் ஆண்டில், அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா ஆட்சிக் காலத்தில் ஈரானுக்கும் அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட 6 வல்லரசு நாடுகளுக்கும் இடையே அணுசக்தி ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது.

அந்த ஒப்பந்தத்தில், அணுசக்தியை ஆக்கபூர்வ பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்துவோம் என்று ஈரான் உறுதியளித்தது. இதை ஏற்று அந்த நாட்டின் மீது விதிக்கப்பட்ட பல்வேறு பொருளாதார தடைகளும் நீக்கப்பட்டன.

அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக பொறுப்பேற்ற டொனால்டு ட்ரம்ப், ஒப்பந்தத்தை மீறி ஈரான் அணுஆயுத சோதனைகளை செய்ததாகவும், தீவிரவாதத்துக்கு நிதி அளிப்பதாக குற்றச்சாட்டினார். இதனைத் தொடர்ந்து ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தை ட்ரம்ப் ரத்து செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும் அமெரிக்கத் தூதுவர் அதுல் கெசாப்புக்கும் இடையில் நேற்று முக்கிய சந்திப்பு ஒன்று இடம்பெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தச் சந்திப்புத் தொடர்பாக அமெரிக்கத் தூதுவர் அதுல் கெசாப் தனது டுவிட்டர் சமூகவளைத்தளத்தில் பதிவு ஒன்றையும் இட்டுள்ளார். இதில், முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு தைப்பொங்கல் வாழ்த்துகளைப் பரிமாறினேன்.

வட மாகாண விவகாரங்கள் தொடர்பாக நல்லதொரு கலந்துரையாடலையும் நடத்தினேன். குறிப்பாக, நிலையான தேசிய நல்லிணக்கம் மற்றும் அனைத்து குடிமக்களுக்குமான பிரகாசமான எதிர்காலத்தை உறுதிப்படுத்தும் வகையில் ஜெனிவா வாக்குறுதிகளை இலங்கை நிறைவேற்ற வேண்டியதன் தேவை குறித்தும் கலந்துரையாடப்பட்டதாக அமெரிக்க தூதுவர் குறிப்பிட்டுள்ளார்.

Published in உள்நாடு

மன்னார், முசலி பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட காயக்குழி கிராம பகுதியில் சுமார் 3 கோடியே 56 இலட்சம் ரூபாய் பெறுமதியான கேரள கஞ்சாவை பொலிஸார் மீட்டுள்ளனர்.

கடற்படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில், நேற்று இரவு இவை மீட்கப்பட்டுள்ளது.

இதன்போது சுமார் 356 கிலோ கிராம் கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாகவும் இதுதொடர்பில் எவரும் கைது செய்யப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீட்கப்பட்ட கஞ்சாப்பொதிகள் சிலாபத்துறை காவல்நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Published in உள்நாடு

நாட்டிலுள்ள மதுபான விற்பனை நிலையங்களை திறப்பதற்கு வழங்கப்பட்டிருந்த நேரத்தை நீடிப்பதற்கும், பெண்கள் மதுபான விற்பனை, கொள்வனவில் ஈடுபடுவதற்கு அனுமதி வழங்குவதற்கும் அரசு சட்டம் உருவாக்கியமை தொடர்பில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி விசேட அறிவிப்பொன்றை விடுக்க தீர்மானித்துள்ளது.

நிதி அமைச்சினால் முன்னெடுக்கப்பட்டுள்ள இந்த தீர்மானம் குறித்து அரசின் பங்காளிக் கட்சியான ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கு எந்தவித அறிவிப்பும் செய்யப்படவில்லை என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். இந்த நடவடிக்கை ஜனாதிபதியின் கொள்கைக்கு எதிரானது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே, ஓரிரு தினங்களில் இது தொடர்பாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி விசேட அறிவிப்பொன்றை நாட்டு மக்களுக்கு விடுக்கவுள்ளதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Published in உள்நாடு

சப்ரகமுவ மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சரான மஹிபால​ஹேரத், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான பொதுஜன பெரமுனயுடன் இணைந்தக்கொண்டார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினரான இவர் கேகாலையில் நேற்று இடம்பெற்ற பொதுஜன பெரமுனக் கூட்டத்தில் கலந்து கொண்டே மஹிந்தவுக்கான தனது ஆதரவை வெளியிட்டார்.

அதேநேரம், நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ஸ தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணியின் களுத்துறை மாவட்ட நிறைவேற்றுக்குழு உறுப்பினரான பிரேமலால் பொன்சேகா, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு தெரிவித்து, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Published in உள்நாடு

இலங்கையில் அபிவிருத்திகளை மேற்கொள்ள இருநூறு கோடியே அறுபத்து மூன்று லட்சம் அமெரிக்க டொலர்களை இந்தியா வழங்கியுள்ளது.

இந்திய வெளிவிவகாரத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜிற்கும் இலங்கை நிதி அமைச்சர் மங்கள சமரவீரவிற்கும் இடையேயான சந்திப்பொன்று நேற்று புது டெல்லியில் இடம்பெற்றுள்ளது.

இந்த சந்திப்பின் போது, இரு நாடுகளுக்கு இடையேயான இரு தரப்பு உறவு மற்றும் அபிவிருத்தி ஒத்துழைப்பு குறித்து விரிவாக ஆராயப்பட்டதாக இந்திய வெளிவிவகாரத்துறையின் பேச்சாளர் ரவீஷ் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக அதிக அளவில் நிதி உதவியினை இந்தியா வழங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அந்தவகையில், இந்தியா இருநூறு கோடியே அறுபத்து மூன்று லட்சம் அமெரிக்க டொலர்களை வழங்கியுள்ளது. இதில், 45 கோடியே 80 லட்சம் அமெரிக்க டொலர்கள் நிதி உதவியாக வழங்கப்பட்டுள்ளது.

இது தவிர, வட மாகாணத்துடனான தொடரூந்து சேவைகளுக்கான தொடரூந்து பாதை நிர்மாண பணிகளுக்காக 80 கோடி அமெரிக்க டொலர்களை இந்தியா வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Published in உள்நாடு

மன்னார் பிரதேசத்தில் பொங்கல் பண்டிகையை பட்டாசு கொழுத்தி கொண்டாடிய சிறுவன் காமடைந்த நிலையில் மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

11 வயது சிறுவன் ஒருவரே இவ்வாறு இந்த சம்பவத்தில் காமடைந்துள்ளார், மேலும் இரண்டு சிறுவர்கள் சிறு காயஹ்களுக்கு உள்ளாகியமையினால் அவர்களை வைத்தியசாலையில் அனுமதிக்க வேண்டிய தேவை ஏற்படவில்லை என தரிவிக்கப்படுகின்றது.

குறித்த சிறுவனின் முகப்பகுதி முழுவதும் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பட்டாசுக்களை ஒன்றோடு ஒன்றாக கோர்த்து கொளுத்திய போது அது வெடிக்கவில்லை என நினைத்த சிறுவன் அருகில் சென்ற வேளையில் பட்டாசு திடீரென வெடித்து இவ்வறு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

Published in உள்நாடு
Page 1 of 3

Latest News

Calendar

« January 2018 »
Mon Tue Wed Thu Fri Sat Sun
1 2 3 4 5 6 7
8 9 10 11 12 13 14
15 16 17 18 19 20 21
22 23 24 25 26 27 28
29 30 31        
Go to top