Items filtered by date: Monday, 15 January 2018

கைப்பற்றப்பட்ட 900 கிலோ கிராம் கொக்கெய்ன் பொதைப்பொருளை அழிக்கும் நிழ்வின் போது இன்று எடுக்கப்பட்ட புகைப்படங்கள்.

01.jpg

02.jpg

03.jpg

04.jpg

05.jpg

07.jpg

Published in உள்நாடு

இந்தியா மற்றும் தென் ஆபிரிக்கா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி இடம்பெற்று வருகின்றது.

நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற தென் ஆபிரிக்க அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்து தனது முதல் இனிங்ஸில் 335 ஓட்டங்களைப் பெற்று சகல விக்கெட்டுக்களையும் இழந்தது. அணியில் அடெய்ன் மார்கம் 94 ஓட்டங்களையும் ஹசீம் அம்லா 82 ஓட்டங்களையும் பெற்றிருந்தனர்.

போட்டியில் 3 ஆம் நாளான இன்று இந்திய அணி விராத் கோலியின் சதத்துடன் 307 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது. இந்திய அணி சார்பாக இந்திய அணித் தலைவர் விராத் 153 ஓட்டங்களைப் பெற்றிருந்தார்.

பந்துவீச்சில் இந்திய அணி சார்பாக முதலாவது இனிங்ஸில் ரவிச்சந்திரன் அஸ்வின் 4 விக்கெட்டுக்களையும், இஷாந் சர்மா 3 விக்கெட்டுக்களையும் கைப்பற்றியிருந்தனர்.

தென் ஆபிரிக்க அணி சார்பாக அதிகபட்சமாக மோர்னி மோக்கல் 4 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தார்.

இலங்கை , பங்களாதேஷ் மற்றும் சிம்பாப்வே அணிகள் பங்குபெறும் முக்கோண கிரிக்கட் தொடர் இன்று டாக்காவில் ஆரம்பமானது.

போட்டித் தொடரின் முதலாவது போட்டி சரே பங்க்ளா மைதானத்தில் இன்று இடம்பெற்றது.

இதில், பங்களாதேஸ் மற்றும் சிம்பாப்வே அணிகள் மோதியன.

இன்றைய போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பங்களாதேஷ் அணி களத்தடுப்பை தேர்வு செய்தது.

இதன்படி சிம்பாப்வே அணி 49 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 170 ஓட்டங்களை பெற்றது. அதிக பட்ச ஓட்டமாக சிக்கந்தர் ரசா 52 ஓட்டங்களைப் பெற்றிருந்தார்

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 28.2 ஓவர்களில் இரண்டு விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 171 ஓட்டங்களைப்பெற்று வெற்றயை தழுவியது. டமிம் இக்பால் ஆட்டமிழக்காமல் 84 ஓட்டங்களை பெற்றார்.

போட்டியில் ஆட்டநாயயகனாக 43 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களை கைப்பற்றிய ஷகிப் அல் ஹசன்  தெரிவு செய்யப்பட்டார்.

போட்டித் தொடரின் இலங்கை அணி பங்கேற்கும் முதலாவது போட்டி நாளை சிம்பாப்வே அணியுடன் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தமது பிரச்சினைகளுக்கு எதிர்வரும் வாரத்திற்குள் தீர்வு கிடைக்காவிட்டால் எதிர்வரும் 22 ஆம் திகதிக்கு பின்னர் முன்அறிவித்தல் இன்றி வேலை நிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் கூறியுள்ளது.

இன்று இடம்பெற்ற அவசர மத்திய செயற்குழுக் கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Published in உள்நாடு

ஈராக்கின் பக்தாத் நகரில் இன்று காலை தற்கொலை குண்டுத் தாக்குதலொன்று இடம்பெற்றுள்ளது.

தற்கொலை குண்டுத்தாக்குதலில் 35 பேர் உயிரிழந்து 92 பேர் காயமடைந்துள்ளனர்.

இரு தற்கொலை குண்டுதாரிகளால் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கடந்த மூன்று நாட்களாக தொடர்ந்து ஈரான் நாட்டில் தற்கொலை குண்டு தாக்குதல் இடம்பெற்று வந்தது. எனினும் இன்று இடம்பெற்ற இந்த தாக்குதல் கடந்த மூன்று தினங்களைவிட ஆபத்தானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்பொழுது ஈராக்கின் பத்தாத் பகுதியில் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேராதனை பல்கலைக்கழகத்தில் இருவேறு பீட மாணவர்களுக்கிடையில் இன்று மோதல் நிலையான்று ஏற்பட்டுள்ளது.

இன்று முற்பகல் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

விஞ்ஞான பீட மாணவர்கள் மற்றும் முகாமைத்துவ பீட மாணவர்களுக்கு இடையிலேயே ஏற்பட்ட மோதலில் இருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மோதலுக்கு காரணம் பகிடி வதையே என பொலிஸாரினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பல்கலைக்கழக நிர்வாகம் மற்றும் ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Published in உள்நாடு

பாதுக்க பிடும்பே பிரதேசத்தில் கூரிய அயுதமொன்றினால் தாக்கி நபரொருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த கொலைச் சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது.

இந்துனில் பிரசன்ன எனும் 21 வயதான நபர் ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

கொலைச் சம்பவதடதை புறிந்ததாகக் கூறப்படும் நபர் கைது செய்யப்பட்டுள்ளதோடு குறித்த நபர் கொலை செய்யப்பட்ட நபரின் மச்சான் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபர் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கின்றனர்.

Published in உள்நாடு

அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான 5 ஒருநாள் சர்வதேச போட்டி தொடரின் முதாலவது போட்டியில் இங்கிலாந்து அணி 5 விக்கட்களினால் வெற்றி பெற்றுள்ளது.

போட்டியில் முதலாவதாக துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 50 ஓவர்கள் நிறைவில் 08 விக்கட்களை இழந்து 304 ஓட்டங்களை பெற்றிருந்தது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 48 ஓவர்களில் 05 விக்கட்களை இழந்து, வெற்றி இலக்கை அடைந்தமை குறிப்பிடத்தக்கது.

போட்டியில் ஆட்டநாயகனாக 181 ஓட்டங்களைப்பெற்ற ஜேசன் ரோய் தெரிவு செய்யப்பட்டிருந்தார். அதுமட்டுமல்லாது போட்டியில் ஜோய் ரூட் ஆட்டமிழக்காமல் 91 ஓட்டங்களைப் பெற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்சவின் பாதுகாப்பு அதிகாரிகளின் எண்ணிக்கை இரண்டாக குறைக்கப்பட்டுள்ளது.
 
இதற்கு முன்னர் அவருக்கு அமைச்சரவை பாதுகாப்பு பிரிவை சேர்ந்த 6 பாதுகாவலர்கள் வழங்கப்பட்டிருந்த நிலையில் அமைச்சு பதவியில் இருந்து நீக்கப்பட்டள்ளதனால் அவருக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளது.
 
ஐக்கிய தேசியக் கட்சியின் வேண்டுகோளுக்கு அமைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் 23 திகதி விஜேதாச ராஜபக்சவை புத்தசாசனம் மற்றும் நீதிமைச்சர் பதவிகளில் இருந்து நீக்கியிருந்தார்.
 
இதனையடுத்து விஜேதாச ராஜபக்ச, அரசியலமைப்புச் சபையில் இருந்து விலகிக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
Published in உள்நாடு

ஹட்டன் கொழும்பு பிரதான வீதியில் கினிகத்தேனை களுகல பிரதேச பகுதியில் பொல்பிட்டிய, பல்லேவத்த, கொல்லேன, மொரஹேனகம, அம்மத்தாவ, வக்கம, வக்ஷபான ஆகிய கிராம மக்கள், மற்றும் மதகுருமார்கள் ஆகியோர் இணைந்து ஆர்பாட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.

இன்று காலை முன்னெடுக்கப்பட்ட இந்த ஆர்பாட்டத்தினால் ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியில் வாகனநெரிசல் ஏற்பட்டிருந்தது.

ஐந்து கிராம சேவகர்கள் பிரிவுகளை உள்ளடக்கிய பல கிராமங்களுக்கு செல்லும் சுமார் 14 கிலோ மீற்றர் கொண்ட பிரதான வீதியான லக்ஷபான வீதி குன்றும் குழியுமாக காணப்படுவதனால் மக்கள் பல்வேறு அசௌகரியங்களை அனுபவித்து வருகின்றனர்.

இவ்வீதியின் குறைபாடு காரணமாக நாளுக்கு நாள் விபத்துக்கள் ஏற்படுவதாகவும், வாகனங்கள் அடிக்கடி பழுதடைவதாகவும், இதனால் பாடசாலை மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

Published in உள்நாடு

Latest News

Calendar

« January 2018 »
Mon Tue Wed Thu Fri Sat Sun
1 2 3 4 5 6 7
8 9 10 11 12 13 14
15 16 17 18 19 20 21
22 23 24 25 26 27 28
29 30 31        
Go to top