Items filtered by date: Wednesday, 17 January 2018

பாராளுமன்ற மற்றும் மாகாண சபை உறுப்பினர்களுக்கான தபால் வசதிகளை அதிகரிப்பது தொடர்பான யோசனைக்கு அமைச்சரவையில் அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படுகின்ற வருடாந்த இலவச தபால் வசதிகளை 175,000 ரூபாவிலிருந்து 350,000 ரூபா வரையிலும், மாகாண சபை உறுப்பினர்களுக்கு

வழங்கப்படுகின்ற வருடாந்த இலவச தபால் வசதிகளை 24,000 ரூபாவிலிருந்து 48,000 ரூபா வரையிலும் அதிகரிப்பது தொடர்பில் குறித்த யோசனை முன்வைக்கப்பட்டிருந்தது.

தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய அலுவல்கள் அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம் மூலம் குறித்த யோசனை சமர்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

Published in உள்நாடு

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த புகையிரத்தில் மோதி பாடசாலை மாணவியொருவர் படுகாயமடைந்துள்ளார்.

யாழ்ப்பாணம் மீசாலை வீரசிங்கம் மத்திய கல்லூரிக்கு முன்பாக குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. குறித்த விபத்தினால் இரண்டு பசு மாடுகள் உயிரிழந்துள்ளன.

மீசாலை வீரசிங்கம் மத்திய கல்லூரியைச் சேர்ந்த மாணவி படுகாயமடைந்த நிலையில் சாவகச்சேரி வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பயணித்துக்கொண்டிருந்த புகையிரதத்தில் மோதிய பசுமாடுகள் பலமீட்டருக்கு அப்பால் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளன. வீசப்பட்ட பசுமாடுகள் வீதியின் ஓரமாக நின்றுக்கொண்டிருந்த குறித்த மாணவி மோதியதாலேட தரையில் வீழ்ந்து படுகாயமடைந்துள்ளார்.

Published in உள்நாடு

தமிழகத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகளில் மூவர் உயிரிழந்துள்ளனர்.

ஜல்லிக்கட்டு போட்டிகளில் கலந்துக் கொண்ட மற்றும் பார்வையிடச் சென்றவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

கடந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் பாரிய பிரச்சினை கிளம்பி, இவ் வருடம் பொட்டிகளை நடாத்த அனுமதி கிடைக்கப்பெற்றது.

இந்நிலையில், இவ் ஆண்டு தடையின்றி ஜல்லிக்கட்டுபோட்டிகள் தமிழக அரசின் அனுசரனையுடன் நடாத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

எதிர்வரும் பெப்ரவரி மாதம் 21ம் திகதி, நடிகர் கமல்ஹாசன தமது அரசயில் கட்சியின் பெயரை உத்தியோகப்பூர்வமாக வெளியிடவுள்ளதாக தமிழக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

குறித்த கருத்து தொடர்பாக நடிகர் கமல் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார், எதிர்வரும் 21ஆம் திகதி, கமல்ஹாசனின் சொந்த ஊரான ராமநாதபுரத்தில் வைத்து மக்களை சந்தித்து அங்கிருந்து தமது அரசியல் பயணத்தை ஆரம்பிக்கவுள்ளர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையில் தமது நாட்டை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் தமக்கு மாத்திரம் அன்றி அனைவருக்கும் இருக்க வேண்டும் எனவும் கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

“மாற்றம் வேண்டும் என்று எண்ணி செய்த தவறு தான் இன்று பாரிய அசௌகரியங்களுக்கு முகங்கொடுக்க வைத்துள்ளது. அன்று செய்த தவறை இனி செய்யாமல் சிந்திக்க வேண்டும். மீண்டும் அந்த தவறை செய்தால் 5 வருடத்திற்கு தலைத்தூக்க முடியாது” என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொது செயலாளர் ஆறுமுகன் தொண்டமான் எம்.பி தெரிவித்தார்.
 
மஸ்கெலியா பிரவுண்ஸ்வீக் தோட்டத்தில் புளூம்பீல்ட் பிரிவில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார்.
 
அவர் மேலும் தெரிவிக்கையில், “75 வருட காலமாக இலங்கை தொழிலாளர் காங்கிராஸ் மக்களுக்கு தேவையானவற்றை தேவையான நேரத்தில் செய்துக் கொடுத்தது. நெருப்பு சுடும் என்று இ.தொ.கா கூறியும், சுட்டாலும் பரவாயில்லை என்று நெருப்பை தொட்டு இன்று பல பிரச்சினைகளுக்கு மக்கள் முகங்கொடுத்து வருகின்றனர்.
 
நான் அமைச்சராக இருந்த நேரத்தில் உரிய முறையில் வீடுகளை அமைத்து கொடுத்தேன். ஆனால் தற்போது முறையற்ற ரீதியில் வீடமைப்பு திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.
 
நமது முன்னோர்கள் உருவாக்கிய தேயிலை மலைகளை நமக்கு பிரித்து கொடுத்தால் என்ன? எம்மால் பராமரிக்க முடியும். தேயிலை காணிகள் பிரிக்கப்படுகின்றன. நமது மரக்கறி தோட்டங்கள் தோட்ட அதிகாரிகளால் அபகரிக்கப்படுகின்றன. இதனை மாற்றியமைக்க வேண்டும்” என்றார
Published in உள்நாடு

இந்திய மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கட் போடடியில் தென் ஆப்ரிக்க அணி 135 ஓட்டங்களினால் அபார வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றியுள்ளது.

286 எனும் வெற்றி இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணி 151 ஓட்டங்களைப்பெற்று சகல விக்கெட்டுக்களையும் இணைந்து தோல்வியைத் தழுவியது.

இந்திய அணி சார்பாக அதிகபட்ச ஓட்டங்களாக ரோஹித் சர்மா 74 பந்துகளுக்கு முகம் கொடுத்து 47 ஓட்டங்களைப் பெற்றிருந்தார்.

தென்னாபிரிக்க அணியின் பந்து விச்சு சார்பில் லுங்கிசனி என்கிடி 39 ஓட்டங்களை மாத்திரம் வழங்கி 6 விக்கெட்டக்களை கைப்பற்றியிருந்தார்.

போட்டியில் ஆட்டநாயகனாகவும் லுங்கிசனி என்கிடி தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

Published in உள்நாடு

கொலம்பியாவில் பாலம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் குறித்த பாலத்தின் கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்த 9 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர்.

தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில், கண்டிநமார்கா, மேதா மாகாண எல்லைகளுக்கு இடையே சிரஜாரா என்ற இடத்தில் 450 மீட்டர் நீளம் கொண்ட ஒரு பாலம் கட்டப்பட்டு வந்த நிலையில், நேற்று முன்தினம் திடீரென இடிந்து விழுந்ததுள்ளது.

இந்த விபத்தில் 9 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். 5 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

DTqQtg-XUAEBzTB.jpg

DTqQthSW0AENz1Y.jpg

PC : Getty Images

கண்டி தெல்தோட்டை  பகுதியிலுள்ள பாடசாலையொன்றில் இன்று பூட்டை உடைத்து பாடசாலை  திறக்கப்பட்டுள்ளது.
 
இது தொடர்பாக மேலும் தெரியவருதாவது, குறித்த பாடசாலையின் அதிபர் பாடசாலைக்கு வருகை தராமை காரணமாக குறித்த பாடசாலையை திறக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
 
மாணவர்களும் ஆசிரியர்களும் பாடசாலைக்குள் செல்ல முடியாமல் வீதியில் நின்றுள்ளனர். இதனை தொடர்ந்து பிள்ளைகளின் பெற்றோர் ஆசிரியர்களும் இணைந்து கல்வி வலயத்துக்கு அறிவித்து, அனுமதிப்பெற்று பாடசாலைக்கு போடப்பட்டிருந்த பூட்டை உடைத்துள்ளனர்.
 
அத்துடன், இது தொடர்பாக பாடசாலையின் பெற்றோர், கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணனின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளனர்.
அதனையடுத்து, இது தொடர்பாக உடனடியாக மாகாண கல்வி பணிப்பாளரிடம் தொடர்பு கொண்டு இது தொடர்பாக குறித்த அதிபருக்கு எதிராக உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு இராஜாங்க அமைச்சர், பணித்துள்ளார்.
 
குறித்த பாடசாலை அதிபர் தொடர்பாக பல்வேறு முறைப்பாடுகள் இதற்கு முன்னர் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அவர் தொடர்பாக மிக விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வலய கல்வி பணிமனையின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
 
அத்துடன், மதியம் வரை பாடசாலையின் அதிபர் பாடசாலைக்கு வருகை தரவில்லை என பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர்.
 
இதன் காரணமாக, அதிபர் காரியாலயத்தை திறக்க முடியாத நிலை ஏற்பட்டதுடன், ஆசிரியர்கள் வரவுப் பதிவேடுகளில் கையொப்பம் இட முடியாத நிலை ஏற்பட்டதுடன், மாணவர்களின் வருகை பதிவேடுகளிலும் பதிவுகளை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.
 
தமது பாடசாலையின் நிலைகுறித்து உரிய அவதானம் செலுத்துமாறு பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Published in உள்நாடு
பஞ்சு மரத்தின் கிளையொன்றை வெட்டிக்கொண்டிருந்த போது, மின்சாரம் தாக்குதலுக்கு உள்ளான ஒரு பிள்ளையின் தந்தையொருவர் உயிரிழந்துள்ளார்.
 
தெனியாய, வரல்ல யோல்ட்டா தோட்டத்தைச் சேர்ந்த பரமசிவம் ஜயமோகன் என்ற 28 வயதுடைய இளைஞரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
 
தோட்டத் தொழிலாளியான அவருக்கு, 3 வயதுடைய பெண் பிள்ளையொன்று இருப்பதுடன், அவருடைய மனைவி, 2 மாதக் கர்ப்பிணி என தெரிவிக்கப்படுகின்றது.
 
தன்னுடைய வீட்டுக்கு சற்றுத்தூரத்தில் உள்ள பஞ்சுமரமொன்றின் கிளையை குறித்த நபர், சனிக்கிழமை மாலை வெட்டிக்கொண்டிருந்துள்ளார்.
 
அதன்போத, அக்கிளை சரிந்து, அதிசக்திக்கொண்ட மின்கம்பியில் மோதியுள்ளது. வெட்டப்பட்ட கிளையின் ஊடாகக் கடத்தப்பட்ட மின்சாரம், அவரைத் தாக்கியுள்ளது. 
 
மரத்திலிருந்து தூக்கியெறியப்பட்ட அவர், சுமார் 40 அடி உயரத்திலிருந்து, மரத்துக்கு கீழே இருந்த பாறையொன்றின் மீது தலைகீழாக விழுந்துள்ளார்.
 
படுகாயமடைந்த நபரை, மொறவக்க வைத்தியச்சாலைக்கு பொதுமக்கள் கொண்டு சென்ற நிலையில், அங்கு அனுமதிக்கப்பட்ட பின்னர், இளைஞர் உயிரிழந்துள்ளார்.
 
சம்பவம் தொடர்பில், தெனியாய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Published in உள்நாடு

மத்திய அதிவேக பாதை அமைக்கப்பட்டதன் பின்னர் புதிய பொருளாதாரமொன்று கட்டியெழுப்பப்படுமென பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

மத்திய அதிவேக பாதையை நேற்று நேரில் சென்று பார்வையிட்டதன் பின்னர் பிரதமர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் கண்டி நகரம் புதிதாக அபிவிருத்தி செய்யப்படும் எனவும் போகம்பர மற்றும் மாவத்தகம வர்த்தக வலயங்கள் நிறுவப்படும் எனவும் இதற்கிணைவாக கடவத்தை நகரம் அபிவிருத்திமிக்க நகரமாக மாற்றியமைக்கப்படுமென்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Published in உள்நாடு
Page 1 of 4

Latest News

Calendar

« January 2018 »
Mon Tue Wed Thu Fri Sat Sun
1 2 3 4 5 6 7
8 9 10 11 12 13 14
15 16 17 18 19 20 21
22 23 24 25 26 27 28
29 30 31        
Go to top