Items filtered by date: Thursday, 04 January 2018

இலங்கை கடல் எல்லையில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 12 பேர் இன்று கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட மீனவர்களுடன் அவர்கள் மீன்பிடிக்காகப் பயன்படுத்திய மூன்று மீன்படி படகுகளும் கடற்படையால் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த கடற்றொழிலாளர்கள் மேலதிக விசாரணைகளுக்காக யாழ்ப்பாணம் மீன்பிடி பணிப்பாளர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

Published in உள்நாடு

யாழ்ப்பாணம் சண்டிலிப்பாய் பகுதியில் மர்மமான முறையில் உயிரிழந்த இளைஞரின் சடலம் கிணற்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளது.

சண்டிலிப்பாய் பகுதியை சேர்ந்த 21 வயதான முருகானந்தன் ஆனந்தபாவு என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மீட்கப்பட்ட சடலத்தில் தாக்கிய காயங்கள் இருக்கின்ற காரணத்தினால் குறித்த நபர் தாக்கி கொலை செய்யப்பட்டு பின்னர் கிணற்றுக்குள் போடப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் எழுப்பியுள்ளனர்.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மானிப்பாய் பெலிஸார் ஆரம்பித்துள்ளதாக தெரிவித்தனர்.

Published in உள்நாடு

மத்தியவங்கியின் பிணைமுறி தொடர்பில் கடந்த 10 மாதங்களாக விசாரணையை முன்னெடுத்த விசாரணை ஆணைக்குழுவுக்கு நன்றி தெரிவிப்பதாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சுனில் ஹந்துனெத்தியின் தலைமையின் கீழ் கோப் குழு ஊடாக முன்னெடுக்கப்பட்ட பிணைமுறி விவகார அறிக்கையானது 2016ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பிரதமரின் அறிவுரைக்கமைய சட்டமா அதிபரிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதற்கமைய, இந்த மோசடி தொடர்பில் தகுந்த நடவடிக்கை எடுக்கும் பொறுப்பு 2016ஆம் ஆண்டு பிரதமராலும், இந்த வருடம் ஜனவரி மாதம் ஜனாதிபதியாலும் சட்டமா அதிபரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

நல்லாட்சியின் தேசிய அரசாங்கம் ஜனநாயகத்தை மற்றும் சட்டத்தை மதிக்கும் செயற்பாடுகளை இதன்மூலம் மீண்டும் உறுதி செய்ய எம்மால் முடிந்துள்ளது. இனி சட்டமா அதிபர் திணைக்களம் உரிய நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது எனவும், பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளமைக்கு அமைய 2008ஆம் ஆண்டிலிருந்து நடைபெற்ற ஊழல் மற்றும் மோசடி தொடர்பில் உரிய விசாரணைகள் இடம்பெற்று சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றமையே தேசிய அரசாங்கத்தின் நோக்கம் என்றும் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிப்பட்டுள்ளது.

Published in உள்நாடு

முஸ்லிம்களுடன் இணக்கப்பாட்டை ஏற்படுத்தினால் மாத்திரமே தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு சாத்தியமாகுமென அமைச்சர் ரிசாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளருக்கு ஆதரவு தெரிவிக்கும் கூட்டம் நேற்று யாழ். நாவாந்துறைப் பகுதியில் நடைபெற்றது. அந்த கூட்டத்தின் பின்னர் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட அமைச்சர், பகிரங்க அழைப்பு விடுக்கப்பட்ட போதிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எவ்வித பதிலையும அளிக்கவில்லை என சுட்டிக்காட்டினார்.

“அரசியல் தீர்வை கேட்டு நிற்கும் அல்லது தீர்வை பெற்று தருவோம் என ஆட்சிக்கு வந்தவர்கள் நிச்சயமாக தமிழ் கூட்டமைப்பை சார்ந்தவர்கள் தான்.

அவர்கள் எந்தவொரு தீர்வை பெறுவது என்றாலும், குறிப்பாக வட கிழக்கில் உள்ள முஸ்லிம்களின் சந்தேகங்களை கழைந்து இணக்கப்பாட்டுடன் செயற்படும் போது தான் தீர்வு சாத்தியமாகும் என்பதை அவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.

கடந்த காலங்களில் கூட்டமைப்பிடம் பகிரங்கமாக அழைப்பு விடுத்திருந்தோம். நல்லாட்சி அரசில் ச`கோதர இனமாகவும் பல அழிவுகளுக்கு உள்ளான முஸ்லிம்களுடன் பேசுங்கள் என கேட்டோம். இதுவரை எமது கட்சியுடன் அவர்கள் பேசவில்லை.

எதிர்காலத்தில் இந்த நாட்டில் பேரினவாத சக்திகள் சிறுபான்மை இனத்தின் அதாவது எமது உரிமையை பறித்தெடுக்க திட்டமிட்டுள்ளமையை நாம் பார்த்துள்ளோம். பொருளாதாரத்தை சீரழித்து எம்மை அடிமைப்படுத்த நினைக்கிறார்கள். மதங்களிடத்தில் பிழவு ஏற்படுத்தி பிரிக்க நினைக்கிறர்கள். ஒன்றுபட்டு செயற்படும் விடயங்களில் நாம் ஒன்றுபட வேண்டும்.” என்றார்.

Published in உள்நாடு

புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கின் பிரதான குற்றவாளி தப்பிச்செல்வதற்கு உதவிய குற்றச்சாட்டில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள முன்னாள் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஶ்ரீகஜனை கைது செய்வதற்கான விசேட விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

சந்தேகநபரான ஶ்ரீகஜன் நாட்டிலிருந்து தப்பிச் செல்வதற்கான எவ்வித சாத்தியங்களும் இல்லை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஏற்கனவே வெளிநாடு செல்ல முயற்சித்த அவரை கட்டுநாயக்க விமான நிலையத்தின் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் திருப்பி அனுப்பியிருந்தனர்.

ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்ற உத்தரவின் பிரகாரம் ஶ்ரீகஜனின் வெளிநாட்டு கடவுச்சீட்டு ஏற்கனவே முடக்கப்பட்டுள்ளது. அத்துடன், அவரைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறும் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Published in உள்நாடு

“தமது வாளால் யார் வெட்டிப்படுகிறார்கள் என்பது தெரியாது என ஜனாதிபதி கூறியிருந்தார். ஆனால் அவரது வாளால் ரணில் வெட்டிப்படவில்லை மாறாக காப்பாற்றப்பட்டுள்ளார்” என மக்கள் விடுதலை முன்னணியின் பிரசார செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான விஜித ஹேரத் கூறியுள்ளார்.

யாழ்ப்பாணம் சாவகச்சேரி பிரதேச சபைக்கு மக்கள் விடுதலை முன்னணியின் சார்பாகப் போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நிகழ்வு நாவற்குழியில் நேற்று மாலை இடம்பெற்றது. இதில் பங்கேற்று உரையாற்றும்போதே அவர் அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

“ரணில் காப்பாற்றப்பட்டுள்ளார். ஆனால் மக்களுக்கு தெரியும் யார் இந்த கொள்ளையில் ஈடுபட்டார்கள் என்று. முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன் மகேந்திரன் மோசடி செய்துள்ளதாக ஆணைக்குழு அறிக்கை சொல்கிறது.

அதில் 11 கோடி ரூபா சூரையாடப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. ரணில் தொடர்பில் அவரை நியமித்தது தொடர்பாக மட்டுமே கூறப்பட்டுள்ளது.” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Published in உள்நாடு

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளராக இருப்பவர் மொஹமட் ஷமி கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது டுவிட்டர் வளைத்தளத்திலும், ‘வாட்ஸ் அப்’பிலும் புத்தாண்டு வாழ்த்து செய்தியை வெளியிட்டார்.

அந்த வாழ்த்து செய்தியில், மலர்களால் அலங்கரிக்கப்பட்ட சிவலிங்கம் படம் இடம் பெற்றிருந்தது.

அந்த படத்துக்கு கீழ் அவர், ‘‘புத்தாண்டில் உங்கள் மனம் முழுக்க எப்போதும் மகிழ்ச்சியும், குதூகலமும் நிறைந்து இருக்க வாழ்த்துகிறேன்’’ என்று கூறி இருந்தார். அவரது இந்த வாழ்த்துக்கு ஆதரவும், எதிர்ப்பும் எழுந்துள்ளது.

மேற்கு வங்கத்தை சேர்ந்த மொஹமட் ஷமிக்கு அம்மாநில முஸ்லிம் அமைப்பு ஒன்று எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மொஹமட் ஷமி தனது வாழ்த்து செய்தியில் இந்து கடவுள் படத்தை பயன்படுத்தியதை ஏற்க முடியாது. மொஹமட் ஷமி தனது போக்கை மாற்றிக் கொள்ளாவிட்டால் அழிவை சந்திக்க நேரிடும் என்று அந்த அமைப்பு எச்சரித்துள்ளது.

ஆனால் இந்துக்கள் மொஹமட் ஷமியின் புத்தாண்டு வாழ்த்தை வரவேற்றுள்ளனர். ஷமியின் மதச்சார்பற்ற, சுதந்திரமான சிந்தனையைப் பாராட்டி அவருக்கு ‘‘அம்ரோகா எக்ஸ்பிரஸ்’’ என்று பட்டம் சூட்டியுள்ளனர்.

சமியை பொருத்தவரை அவர் தனக்கு ஏற்பட்டுள்ள எதிர்ப்பு, ஆதரவு இரண்டையுமே கண்டு கொள்ளவில்லை. கேப்டவுனில் உள்ள அவர் கிரிக்கெட் போட்டிக்கு தன்னை தயார்படுத்துவதில் தீவிரமாக உள்ளார்.

சில மாதங்களுக்கு முன்பு அவர் தனது மனைவி ஜீன்ஸ் பேண்ட்டில் இருப்பது போன்ற படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். இதற்கு சில இஸ்லாமிய அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
ஜீன்ஸ் பேண்ட்டில் இருக்கும் மனைவி படத்தை சமி உடனே நீக்க வேண்டும் என்று மிரட்டல் விடுத்தன. ஆனால் மொஹமட் ஷமி அந்த நெருக்கடிக்கும், மிரட்டலுக்கும் கடைசி வரை அடி பணியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மத்திய வங்கியின் பிணை முறி மோசடி விவகாரம் தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையிலுள்ள பரிந்துரைகளை ஏற்றுக்கொள்வதாக, ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினருத் பிரதியமைச்சருமான அஜித் பி பெரேரா தெரிவித்துள்ளார்.

மேலும், அர்ஜூன மகேந்திரனது நியமனம் தவறல்ல என, ஆணைக்குழு ஏற்றுக்கொண்டுள்ளமை தொடர்பிலும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதற்கமைய, பிரதமருக்கு எதிராக சிலர் முன்வைத்த குற்றச்சாட்டுக்கள் ஆதாரமற்றது எனவும் அஜித் பி பெரேரா மேலும் கூறியுள்ளார்.

சட்டம் அனைவருக்கும் பொதுவானது என இதன்போது குறிப்பிட்ட அவர், பிணை முறி மோசடி தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்ட குழுவின் பரிந்துரைகளை செயற்படுத்த ஒத்துழைப்பு வழங்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Published in உள்நாடு
Page 1 of 4

Latest News

Calendar

« January 2018 »
Mon Tue Wed Thu Fri Sat Sun
1 2 3 4 5 6 7
8 9 10 11 12 13 14
15 16 17 18 19 20 21
22 23 24 25 26 27 28
29 30 31        
Go to top