1,430 கோடி வருமான வரி ஏய்ப்பு செய்த சசிகலாவின் உறவினர்கள்

1,430 கோடி வருமான வரி ஏய்ப்பு செய்த சசிகலாவின் உறவினர்கள்

தமிழக முன்னாள் முதல்வரின் நெருங்கிய தோழி சசிகலாவின் உறவினர்கள் வீடுகளில் கடந்த 5 நாட்களாக நடத்தப்பட்ட சோதனையில் 1,430 கோடி (இந்திய ரூபாய்) ரூபா வருமானத்துக்கு வரி செலுத்தாமல் மோசடி செய்யப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக வருமான வரித் துறைவட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தமிழகம், புதுச்சேரி, டெல்லி, பெங்களூரு நகரங்களில் 187 இடங்களில் சோதனைகள் நடத்தப்பட்டன. இதில் 7 கோடி ரூபாய் பணம், 5 இலட்சம் மதிப்புள்ள நகைகள் மற்றும் ஏராளமான அசையா சொத்துகளின் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

15 வங்கி வைப்பகங்கள் முடக்கப்பட்டுள்ளதோடு, பல கிலோ தங்கம், வைர நகைகளை மதிப்பீடு செய்ய பாதுகாப்பான இடத்தில் வைக்கப்பட்டிருக்கிறது. மேலும் சசிகலா குடும்பத்தினர் ஏராளமான போலி நிறுவனங்களை நடத்தியிருப்பதும் தெரியவந்துள்ளது.

இதுதொடர்பாக வருமான வரித் துறை மூத்த அதிகாரி ஒருவர் கருத்து சசிகலா குடும்பத்தினர் வெளியிடுகையில் “வீடுகளில் நடத்தப்பட்ட சோதனைகளில் 1,430 கோடி வருமானத்துக்கு வரி செலுத்தாமல் மோசடி செய்யப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சம்பந்தப்பட்டவர்களுக்கு அழைப்பாணை அனுப்பும் பணியை ஏற்கனவே தொடங்கிவிட்டோம்.

முடக்கப்பட்ட 15 வங்கி வைப்பகங்களை திறந்து சோதனை செய்யும்போது சொத்து மதிப்பு மேலும் அதிகரிக்கும். கைப்பற்றப்பட்ட சொத்து பத்திரங்களை ஆய்வு செய்து அவற்றை மதிப்பீடு செய்வது, சம்பந்தப்பட்டவர்களின் வாக்குமூலத்தை பதிவு செய்வது, அதன்பேரில் நடவடிக்கை எடுப்பது ஆகிய பணிகள் படிப்படியாக நடைபெறும்.

அசையும் மற்றும் அசையா சொத்துகளின் ஆவணங்களை பரிசீலித்து அவற்றில் வரி ஏய்ப்பு நடைபெற்றுள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்யப்படும்.“ எனக் குறிப்பிட்டுள்ளார்.

Calendar

« November 2017 »
Mon Tue Wed Thu Fri Sat Sun
    1 2 3 4 5
6 7 8 9 10 11 12
13 14 15 16 17 18 19
20 21 22 23 24 25 26
27 28 29 30      
Go to top