இலங்கை சிறுமிகள் சவுதி அரேபியாவில் பாலியல் அடிமைகளா?

இலங்கை சிறுமிகள் சவுதி அரேபியாவில் பாலியல் அடிமைகளா?

இலங்கை சிறுமிகள் சவுதி அரேபியாவில் பாலியல் அடிமைகளாக விற்பனை செய்யப்படுவதாக பரபரப்பு தகவல் ஒன்றை அந்நாட்டு இளவரசி, ஒருவர் அம்பலப்படுத்தியுள்ளார்.

சவுதி அரேபியாவின் மிகப்பெரும் பணக்காரர்களில் ஒருவரான அல்வலீத் பின் தலால் ஊழல் குற்றச்சாட்டுகளின் பேரில் அண்மையில் கைது செய்யப்பட்டிருந்தார்.
இந்நிலையில் அவரின் முன்னாள் மனைவி அமீரா பின்த் அய்தான் பின் நயீப் சவுதியில் பாலியல் அடிமைகளாக இலங்கையை சேர்ந்த சிறுமிகள் விற்பனை செய்யப்படுவதாக தகவல் வெளியிட்டுள்ளார்.

பிரான்ஸ் சஞ்சிகையான லீ மொண்டெவிற்கு கடந்த ஞாயிற்றுக் கிழமை வழங்கிய நேர்காணிலிலேயே இளவரசி அமீரா மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
குறித்த நேர்காணலில் அவர் மேலும் தெரிவித்ததாவது,

இலங்கை, பங்களாதேஸ், பிலிப்பைன்ஸ், ரோமானியா மற்றும் பல்கேரியா போன்ற நாடுகளின் அழகான அநாதைச் சிறுமிகள் சவுதி அரேபியாவில் உள்ள செல்வந்தர்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

இவ்வாறு விற்பனை செய்யப்படும் சிறுமிகளில் வெள்ளைத் தோல் கொண்ட சிறுமிகள் மற்றும் பெண்களுக்கு கேள்வி அதிகம் காணப்படுகிறது. இவர்களை பாலியல் அடிமைகளாக குறித்த பணக்கார குடும்பத்தினர் பயன்படுத்திக்கொள்கிறார்கள். இதனை பொலிஸாரும் கண்டுக்கொள்வதில்லை.

அத்துடன் தற்போதைக்கு சவுதியில் பல்வேறு குடும்பங்கள் ஒன்றிணைந்து மகிழ்ச்சியாக இருக்கும் தருணங்களில் மதுவிற்கும் போதை பொருட்களுக்கும் பஞ்சம் இருக்காது. அவற்றில் பாலியல் அடிமையாக விற்கப்படும் சிறுமிகளின் நடனம் அரங்கேற்றப்படுகின்றது. குறித்த சிறுமிகளை பணம் கொடுத்து வாங்கும் நபர்களின் கட்டுப்பாட்டை விட்டு அவர்களை வெளியில் செல்லுவதற்கு கூட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

ஆசிய நாடுகளில் இருந்து எங்கள் நாட்டிற்கு வேலைத் தேடி வரும் பெண்களும் ஒரு வகையான அடிதை;தனமாகவே நடத்தப்படுகின்ற நிலைபாட்டையே கொண்டிருக்கிறார்கள். இவ்வாறு வரும் இளம்பெண்கள் சிறு குழுக்களாக பிரிக்கப்பட்டு ஒழுக்க கேடான செயல்களில் ஈடுப்படுத்தப்பட்ட வருவதோடு, வெள்ளை நிறப் பெண்கள் கடத்தப்படுதல் மற்றும் பாலியல் நடைமுறைகளில் அவர்களை ஈடுப்படுத்துதல் என்பன ஒப்பிட்டு அளவில் பொதுவானவையே ஆகும்.' என்றார்.

Calendar

« November 2017 »
Mon Tue Wed Thu Fri Sat Sun
    1 2 3 4 5
6 7 8 9 10 11 12
13 14 15 16 17 18 19
20 21 22 23 24 25 26
27 28 29 30      
Go to top