தொலைக்காட்சி அலுவலகத்தை கைப்பற்றிய ஏமனின் கிளர்ச்சியாளர்கள்

தொலைக்காட்சி அலுவலகத்தை கைப்பற்றிய ஏமனின் கிளர்ச்சியாளர்கள்

ஏமனில், ஹவுதி கிளர்ச்சிப்படையினர் அல் யூம் எனும் தொலைக்காட்சி அலுவலகத்தைக் கைப்பற்றியதுடன், அங்கிருந்த 13 செய்தியாளர்கள் உட்பட 41 ஊழியர்களை பிணைக் கைதிகளாக சிறைப்பிடித்துள்ளனர்.

ஏமனில், சவுதிப்படைக்கு எதிராக, ஹவுதிக் கிளர்ச்சிக் குழுவினரும், முன்னாள் அதிபர் சாலேவின் படையினரும் கூட்டுச்சேர்ந்து போரிட்டு வந்தனர்.

இந்நிலையில், ஹவுதிக் கிளர்ச்சிக் குழுவினருக்கும் அதிபர் சாலே படையினருக்கும் இடையே திடீரென மோதல் மூண்டதால், கடந்த சில தினங்களுக்கு முன்னர் சாலேவின் மாளிகையை ஹவுதிக் கிளர்ச்சிப் படையினர் தரைமட்டமாக்கினர்.

சாலேவின் வாகனத்தின் மீதும் தாக்குதல் நடத்தினர். இதில் சாலே உயிரிழந்துவிட்டதாக தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில், சாலேவுக்கு ஆதரவான அல் யூம் தொலைக்காட்சி அலுவலகத்தை கைப்பற்றிய ஹவுதிக் கிளர்ச்சியாளர்கள், அங்கிருந்து பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட ஊழியர்களை கைதிகளாக சிறைப்பிடித்துள்ளனர்.

Calendar

« December 2017 »
Mon Tue Wed Thu Fri Sat Sun
        1 2 3
4 5 6 7 8 9 10
11 12 13 14 15 16 17
18 19 20 21 22 23 24
25 26 27 28 29 30 31
Go to top