இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை மீட்கக் கோரி ஆர்ப்பாட்டம்

இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை மீட்கக் கோரி ஆர்ப்பாட்டம்

ஓகி புயலிலில் சிக்கி மாயமான மீனவர்களை மீட்கக் கோரிம், இலங்கை சிறையில் உள்ள மீனவர்களையும் படகுகளையும் விடுதலை செய்ய வலியுறுத்தியும் இராமேஸ்வரம் பஸ் நிலையம் அருகே மீனவர்கள் கண்டண ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர்.

“ஓகி புயலில் மாயமான மீனவர்களை மீட்க வேண்டும், ஓகி புயலில் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு கேரள அரசு 20 இலட்சம் ரூபாய்) நிவாரணம் ஒதுக்கியுள்ளது இதே போன்று தமிழக அரசு நிவாரணம் ஒதுக்க வேண்டும், இலங்கை கடற்படை தொடர் தாக்குதல் காரணமாக இராமேஸ்வரம் மீனவர்கள் மீன்பிடி தொழில் செய்ய முடியாத நிலை உள்ளது எனவே மாற்று துறைமுகமான குந்துகால் துறைமுகத்தில் துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க அனுமதிக்க வேண்டும்“ என பல கோரிக்கைகைளை முன்வைத்து இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மேலும் “இலங்கை சிறையில் உள்ள மீனவர்களையும் படகுகளையும் விடுதலை செய்ய வேண்டும் மீனவர்களுக்கு வழங்க வேண்டிய மழைக்கால நிவாரண நிதியை உடனடியாக வழங்க வேண்டும்.“ எனவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினர்.

இராமேஸ்வரம் மீனவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், மீனவர்கள், மீனவ பெண்கள், குழந்தைகள் என பலர் பங்கேற்றனர்.

Latest News

Calendar

« February 2018 »
Mon Tue Wed Thu Fri Sat Sun
      1 2 3 4
5 6 7 8 9 10 11
12 13 14 15 16 17 18
19 20 21 22 23 24 25
26 27 28        
Go to top