அனில் பிணையில் விடுதலை

அனில் பிணையில் விடுதலை

அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் கிறிஸ்மஸ் மரத்தில் மின் விளக்கு அலங்காரத்தை சேதப்படுத்திய அனிலை கைது செய்த பொஸார் பின்னர் பிணையில் விடுவித்துள்ளனர்.

நியூ ஜெர்சியில் ‘சீ கிர்ட்’ பகுதியில் மிகப்பெரிய அளவில் கிறிஸ்மஸ் மரம் வைக்கப்பட்டிருந்தது. அந்த மரம் முழுவதும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. இந்த மின் விளக்கு அலங்காரத்தை ஒரு அனில் கடித்து சேதப்படுத்தியிருந்தது.

இதனால் கிறிஸ்மஸ் மரத்தில் பல மின் விளக்குகள் ஒளிரவில்லை எனவே, அந்த அனிலை நியூஜெர்சி பொலிஸார் தேடிக் கண்டுபிடித்து கைது செய்தனர். இத்தகவலை ‘பேஸ்புக்’கிலும் பதிவிட்டிருந்தனர்.

எனினும் சில மணி நேரத்திலேயே அது பிணையில் விடுதலையானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Calendar

« December 2017 »
Mon Tue Wed Thu Fri Sat Sun
        1 2 3
4 5 6 7 8 9 10
11 12 13 14 15 16 17
18 19 20 21 22 23 24
25 26 27 28 29 30 31
Go to top