ரஷ்ய தூதரகம் மீது கல்வீச்சு தாக்குதல்

ரஷ்ய தூதரகம் மீது கல்வீச்சு தாக்குதல்

கொழும்பில் அமைந்துள்ள ரஷ்ய தூதரகம் மீது சரம்மாரியாக கல்வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று மாலை மாலை குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

தாக்குதல் தொடர்பில் ரஷ்ய தூதரகத்தினால் பொலிஸ் முறைப்பாடுகள் எதுவும் மேற்கொள்ளப்படாத நிலையில், உயர்மட்ட உத்தரவின் கீழ் பொலிஸ் அதிகாரிகள் சம்பவ இடத்துக்குச் சென்று சம்பவம் நடந்த போது பதிவான கண்காணிப்பு காணொளிப் பதிவுகளை சமர்ப்பிக்குமாறு கோரியுள்ளனர். எனினும் தூதரகத்தின் ரஷ்ய அதிகாரிகள் அந்த கோரிக்கைக்கு மறுப்பு தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தாக்குதல் நடத்தப்பட்ட நிலத்தை கைப்பற்றும் நோக்கில் ரஷ்ய தூதரக அதிகாரிகளே இந்த கல்வீச்சு தாக்குதலை நடத்தியதாகவும் சந்தேகங்கள் எழுப்பப்பட்டுள்ளன.

Calendar

« January 2018 »
Mon Tue Wed Thu Fri Sat Sun
1 2 3 4 5 6 7
8 9 10 11 12 13 14
15 16 17 18 19 20 21
22 23 24 25 26 27 28
29 30 31        
Go to top