அமெரிக்காவுடனான கூட்டு இராணுவ பயிற்சியை கைவிடவேண்டும்

அமெரிக்காவுடனான கூட்டு இராணுவ பயிற்சியை கைவிடவேண்டும்

அமைதி ஏற்படவேண்டுமாயின் அமெரிக்காவுடனான கூட்டு இராணுவ பயிற்சியை கைவிடுமாறு தென் கொரியாவை வடகொரியா வலியுறுத்தியுள்ளது.

தென்கொரியாவில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க வடகொரியா தீர்மானித்துள்ளது.

இரு நாட்டு உயர்அதிகாரிகள் கடந்த 9ஆம் திகதி நடத்திய பேச்சுவார்த்தையில் இதற்கான இணக்கம் எட்டப்பட்டது. மேலும் பிரச்சினைக்கு தீர்வு காண இராணுவ ரீதியிலான பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்குவது என்றும் முடிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், வடகொரியாவின் தொழிலாளர் கட்சி சார்பில் வெளியாகும் ரோடாங் சின்மன் பத்திரிகையில் வெளியாகியுள்ள கட்டுரையில், “கொரிய தீபகற்பபகுதியில் உண்மையிலேயே அமைதியை நிலைநாட்ட விரும்பினால், அமெரிக்காவுடனான கூட்டு இராணுவ பயிற்சியை தென்கொரியா கைவிட வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது

Calendar

« January 2018 »
Mon Tue Wed Thu Fri Sat Sun
1 2 3 4 5 6 7
8 9 10 11 12 13 14
15 16 17 18 19 20 21
22 23 24 25 26 27 28
29 30 31        
Go to top