கடிதத்தை திறந்து பார்த்த ட்ரம்பின் மருமகள் வைத்தியசாலையில்

கடிதத்தை திறந்து பார்த்த ட்ரம்பின் மருமகள் வைத்தியசாலையில்

வெள்ளை “பவுடர்” உடன் வந்த மர்ம கடிதத்தை திறந்து பார்த்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் மருமகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மான்ஹாட்டனில் உள்ள டிரம்பின் மூத்த மகனான ஜூனியர் டிரம்பின் வீட்டிற்கு நேற்றைய தினம் ஒரு கடிதம் வந்துள்ளது.

அந்த கடிதத்தை அவரது மனைவி வனிசா திறந்து பார்த்துள்ளார். அதில் சந்தேகத்திற்குரிய வகையில் வெள்ளை பவுடர் இருந்துள்ளது.

விஷத்தன்மை இருக்கலாம் என்று சந்தேகித்த அவர் உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தார்.

கடிதம்வந்த போது வீட்டில் இருந்தவர்கள் அனைவரும் உடனடியாக வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்பட்டனர்..

எனினும் அந்த பவுடரை ஆய்வுக்கு உட்படுத்தியதில் அதில் விஷத்தன்மையோ அல்லது மனித உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் இரசாயணங்களோ  இல்லையெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடிதங்கள் மூலம் விஷதன்மை வாய்ந்த பொருட்களை அனுப்பி நோய் பரப்புவது 2001ஆம் ஆண்டு ஆரம்பமானது. அந்த்ராக்ஸ் கிருமி இவாறு பரப்பப்பட்டதில் 5 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

Latest News

Calendar

« February 2018 »
Mon Tue Wed Thu Fri Sat Sun
      1 2 3 4
5 6 7 8 9 10 11
12 13 14 15 16 17 18
19 20 21 22 23 24 25
26 27 28        
Go to top