இலங்கையில் சீன ஆதிக்கத்தை தடுக்க ட்ரம்ப், மோடி மந்திராலோசனை

இலங்கையில் சீன ஆதிக்கத்தை தடுக்க ட்ரம்ப், மோடி மந்திராலோசனை

இலங்கை உட்பட தெற்காசியப் பிராந்திய நாடுகளில் வலுத்துவரும் சீனாவின் ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்காக வொஷிங்டனும் புதுடில்லியும் இணைந்து செயற்படுவது தொடர்பில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் முக்கிய பேச்சு நடத்தியுள்ளனர்.

பிலிப்பைன்ஸ் தலைநகரான மணிலாவில் நடைபெற்றுவரும் ஆசிய பசுபிக் பொருளாதார ஒத்துழைப்பு மாநாட்டின்போதே இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

சீனாவின் பட்டுப்பாதை திட்டத்தால் ஆசியப் பிராந்தியத்திலுள்ள கேந்திர முக்கியத்துவமிக்க நாடுகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகிவிடுமா என்ற அச்சம் ஏற்பட்டுள்ள நிலையில், ட்ரம்ப் மோடியின் இந்தச் சந்திப்பு முக்கியத்துவம் பெற்றதாகக் கருதப்படுகின்றது.

குறித்த சந்திப்பில் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல், இந்திய வெளியுறவுச் செயலாளர் ஜெய்சங்கர் உட்பட இந்திய வெளியுறவுத்துறையின் உயர்மட்ட அதிகாரிகளும், கொள்கை வகுப்பாளர்களும் பங்கேற்றிருந்தனர்.

தெற்காசியப் பிராந்தியத்தின் வல்லரசெனக் கருதப்படும் இந்தியா, இலங்கையில் சீனா ஆழமாகக் காலூன்றுவது தொடர்பில் தமது அதிருப்தியை தொடர்ச்சியாக வெளியிட்டுவருகின்றது.

எனவே, இந்தச் சந்திப்பின்போதும் இவ்விவகாரம் பற்றி பேசப்பட்டிருக்கலாம் என இராஜதந்திரியொருவர் நேற்று "சுடர்ஒளி'யிடம் தெரிவித்தார். அதேவேளை, பொருளாதாரத்தில் அமெரிக்காவுக்கு சவால் விடுக்கும் வகையில் சீனா வளர்ச்சியடைந்துவருவதால் இவ்விரு நாடுகளுக்குமிடையே மறைமுக பனிப்போர் ஏற்பட்டுள்ளது.

Calendar

« November 2017 »
Mon Tue Wed Thu Fri Sat Sun
    1 2 3 4 5
6 7 8 9 10 11 12
13 14 15 16 17 18 19
20 21 22 23 24 25 26
27 28 29 30      
Go to top