தூக்கில் தொங்கிய நிலையில் சிறுமியின் சடலம் மீட்பு

தூக்கில் தொங்கிய நிலையில் சிறுமியின் சடலம் மீட்பு
பலாங்கொடை - ரன்தொலவத்த பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் நான்கு வயது சிறுமி ஒருவரின் சடலம் ஒன்றை பொலிஸார் மீட்டுள்ளனர்.
 
பாதிமா சௌம்யா என்ற சிறுமியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகவும், குறித்த சம்பவம் இடம்பெற்ற போது வீட்டில் யாரும் இருக்கவில்லை எனவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர். 
 
குறித்த சம்பம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வீடு திரும்பிய சிறுமியின் தாய், மகளை காணவில்லை என தேடிய போது, வீட்டின் பின்பகுதியில் சிறுமி தூக்கில் தொங்கிய நிலையில் இருப்பதை பார்த்து தாய் அதிர்ச்சியடைந்துள்ளார்.
 
இது தொடர்பில் பலாங்கொடை பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து, சம்பவம் இடத்திற்கு விரைந்த பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளதுடன் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.  எனினும் இது கொலையாக இருக்கலாம் என சந்தேகிப்பதுடன் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Calendar

« November 2017 »
Mon Tue Wed Thu Fri Sat Sun
    1 2 3 4 5
6 7 8 9 10 11 12
13 14 15 16 17 18 19
20 21 22 23 24 25 26
27 28 29 30      
Go to top