எரிவாயு மின் உற்பத்தியை அதிகரிக்க அரசு திட்டம்

எரிவாயு மின் உற்பத்தியை அதிகரிக்க அரசு திட்டம்
மேல் மாகாணத்தில் டீசல் மற்றும் பெற்றோலால் மின் உற்பத்தியை மேற்கொள்ளும் மின் நிலையங்களில் எதிர்காலத்தில் இயற்கை எரிவாயு மூலம் மின் உற்பத்தியை மேற்கொள்ளும் திட்டம் குறித்து சிந்தித்துவருவதாக மின் மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்திகள் பிரதி அமைச்சர் அஜித் பி.பெரேரா தெரிவித்தார்.
 
நாடாளுமன்றம் சபாநாயர் கருஜயசூரிய தலைமையில் இன்று காலை 9.30 மணிக்கு ஆரம்பமானது. தினப் பணிகள் முடிவடைந்தப்பினர், வாய்மூல வினாவுக்கான கேள்வி நேரத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஆசும் ஆரசிங்க, நாடு எதிர்காலத்தில் பாரிய மின் தட்டுப்பாடொன்றை எதிர்கொள்ளவுள்ளது. அவ்வாறான சந்தர்ப்பங்களை சுற்றாடலுக்குப் பாதிப்பற்ற விதத்தில் பாதிப்பை எதிர்கொள்வதற்கு மின் மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்திகள் அமைச்சால் மேற்கொள்ளப்படும் மாற்று நடவடிக்கைகள் என்ன? என்று எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். 
 
அவர் மேலும் கூறியதாவது, 
 
மேல் மாகாணத்தில் டீசல் மற்றும் பெற்றோல் மூலம் மின் உற்பத்தி செய்யும் பல நிலையங்கள் உள்ளன. அவை அனைத்துமே உரிய அனுமதிப் பத்திரங்களை பெற்று இந்த வருடத்துக்குள் புதுப்பிக்கப்படும். 
 
மாநகர அபிவிருத்தியென்பது சுற்றாடல் பாதுகாப்புடனேயே நடைபெறவேண்டும். இதனால் தொடர்ந்தும் எரிபொருள் மூலம் மின் உற்பத்திகளை மேற்கொள்வது உகந்ததல்ல. இயற்கை எரிவாயுவுக்கு மாறுவதே பொருத்தமானது. அதுவே சுற்றாடலுக்குப் பாதுகாப்பாக அமையும். நாட்டின் மின் உற்பத்தியை அதிகரிக்கவேண்டிய தேவையும் உள்ளது. நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்திற்கு அடுத்ததாகஇ பெரிய மின் உற்பத்தி நிலையம் கெரவலப்பிட்டியில் நிர்மாணிக்கப்படவுள்ளது. அது 300மெகாவோட்ஸ் மின் உற்பத்தி செய்யக்கூடியதாக இருக்கும் என்றார்.  

Calendar

« November 2017 »
Mon Tue Wed Thu Fri Sat Sun
    1 2 3 4 5
6 7 8 9 10 11 12
13 14 15 16 17 18 19
20 21 22 23 24 25 26
27 28 29 30      
Go to top