மத்திய, ஊவா மாகாண மக்களுக்கு 5.4 பில்லியன்களை வழங்கியது ஐ.ஒ

மத்திய, ஊவா மாகாண மக்களுக்கு 5.4 பில்லியன்களை வழங்கியது ஐ.ஒ

மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் வறுமை நிலையில் வாழும் மக்களின் வருமானங்களை மேம்படுத்தும் நடவடிக்கைகளுக்காகவும், நெருக்கடியான நிலைகளிலும் அவர்களுக்கு அருந்துவதற்கு போதியளவு உணவு காணப்படுவதை உறுதி செய்யும் நடவடிக்கைகளுக்காகவும் 5.4 பில்லியன் ரூபாய்களை அன்பளிப்பு செய்ய ஐரோப்பிய ஒன்றியம் முன்வந்துள்ளது.

இலங்கையின் கிராமிய அபிவிருத்திக்கான உதவி எனும் ஐரோப்பிய ஒன்றியத்தின் பரந்தளவு நிகழ்ச்சித்திட்டத்தின் அங்கமாக இந்த நன்கொடை அமைந்துள்ளதுடன், மொனராகலை, பதுளை, நுவரெலியா மற்றும் மாத்தளை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த கிராமிய மக்களுக்கு அனுகூலமளிப்பதாக இந்த திட்டம் அமைந்துள்ளது.

2017 - 2022 வரையான ஐந்து ஆண்டுகளுக்கு இந்த நிகழ்ச்சித்திட்டம் அமுலில் இருக்கும். இந்த நிகழ்ச்சித்திட்டத்தை கிராமிய மற்றும் பெருந்தோட்ட சமூகங்களைச் சேர்ந்த பெண்கள் மற்றும் இளைஞர்களின் சிறு மற்றும் நடுத்தரளவு வர்த்தகங்களை உருவாக்குவதிலும் வலுவூட்டுவதிலும் பங்களிப்பு வழங்கவுள்ளது.

பெருந்தோட்ட மட்டங்களில் தொழில் உருவாக்கம், வியாபார அபிவிருத்தி மற்றும் பொருளாதார வளர்ச்சி போன்றவற்றில் அவர்களின் பங்குபற்றலை மேம்படுத்த ஊக்கமளிக்கும் நடுத்தரளவு வியாபாரங்களுக்கு வியாபார செயற்படுத்தல் சூழலை இந்தத்திட்டம் உதவியளிக்கவுள்ளது.

'வறுமை நிலையில் வாழ்பவர்களை கவனத்தில் கொண்டு இந்த நிகழ்ச்சித்திட்டத்தை நாம் அறிமுகம் செய்துள்ளோம். சிறந்த குடிநீர் மற்றும் கழிவறை வசதிகள் முதல் அவர்களின் தொழில்நுட்ப அறிவை மேம்படுத்துவது வரையான செயற்பாடுகளை முன்னெடுப்பதனூடாகவும், பெண்கள் வலுவூட்டும் செயற்பாடுகளினூடாகவும் இந்த பின்தங்கிய பிரதேசங்களைச் சேர்ந்த மக்கள் தமது வாழ்க்கை தராதரத்தில் குறிப்பிடத்தக்களவு உயர்வை அவதானிக்கக்கூடியதாக இருக்கும்.“ என ஐரோப்பிய ஒன்றியத் தூதுக்குழுவின் தூதுவர் துங்-லாய் மார்கியு தெரிவித்துள்ளார்.

இந்த நிகழ்ச்சித்திட்டத்தை முன்னெடுப்பதற்காக இலங்கை அரசாங்கம் மற்றும் சிவில் சமூக அமைப்புகள் சிலதுடன் கைகோர்ப்பதையிட்டு நாம் மகிழ்ச்சியடைகிறோம். இந்த பங்காண்மைகளினூடாக மக்களுக்கு வழங்கப்படும் உதவிகள், அவர்களின் வாழ்க்கையில் நிலைத்திருக்கும் மாற்றத்தை ஏற்படுத்தும் என கருதுகிறோம்' எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Calendar

« November 2017 »
Mon Tue Wed Thu Fri Sat Sun
    1 2 3 4 5
6 7 8 9 10 11 12
13 14 15 16 17 18 19
20 21 22 23 24 25 26
27 28 29 30      
Go to top