புதிய அரசியலமைப்புக்கு டில்லி அழுத்தம் கொடுக்கவில்லை

புதிய அரசியலமைப்புக்கு டில்லி அழுத்தம் கொடுக்கவில்லை

“இலங்கையில் புதியதொரு அரசியலமைப்பு உருவாக்கும் விடயத்தில் இந்தியா எவ்விதத்திலும் தலையீடு செய்யவில்லை; அழுத்தங்களைப் பிரயோகிக்கவில்லை'' என்று இந்தியாவுக்கான இலங்கைத் தூதுவர் சித்திரங்கனி வாகீஸ்வர "சுடர் ஒளி'யிடம் தெரிவித்தார்.

"தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வுகாணல், இன நல்லிணக்கம் உள்ளிட்ட விடயங்களை மையப்படுத்தியே உள்நாட்டுத் தேவைக்கேற்ப புதிய அரசியலமைப்பு தயாரிப்புப் பணி இடம்பெறுகின்றது'' என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

அரசியலமைப்பு நிர்ணயச் சபையில் இடைக்கால அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்தவே புதிய அரசியலமைப்பு தேவையாகவுள்ளது. அதனடிப்படையிலேயே செயற்பாடுகள் இடம்பெற்றுவருகின்றன.

இந்நிலையில், புதிய அரசியலமைப்பை உருவாக்கும் விடயத்தில் இந்தியாவின் அழுத்தம் உள்ளது எனக் கூறப்படுவதில் எவ்வித உண்மையும் இல்லை'' என்றும் அவர் கூறினார்.

Calendar

« December 2017 »
Mon Tue Wed Thu Fri Sat Sun
        1 2 3
4 5 6 7 8 9 10
11 12 13 14 15 16 17
18 19 20 21 22 23 24
25 26 27 28 29 30 31
Go to top