குடும்ப ஆதிக்கம் தொடர்ந்தால் அபிவிருத்தி சாத்தியமில்லை

குடும்ப ஆதிக்கம் தொடர்ந்தால் அபிவிருத்தி சாத்தியமில்லை

நுவரெலியா மாவட்டத்தில் புதிய பிரதேசசபைகள் உருவாக்கப்பட்டுள்ள போதிலும், 1987ஆம் ஆண்டும 33 இலக்க பிரதேசசபை சட்டம் திருத்தப்படாமை, மலையக மக்களுக்கு பெரும் பாதிப்பாகும்” என,தமிழ் முற்போக்குக் கூட்டணியின் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரைாயற்றியபோது அவர் இதனைக் கூறினார்.

அவர் தொடர்ந்து கூறுகையில், “கடந்த காலங்களில் காணி உரிமைகளைப் பெற்றுக்கொள்வதில் சிக்கல் நிலைமை காணப்பட்டது 2015ஆம் ஆண்டு லக்ஷ்மன் கிரியெல்ல பெருந்தோட்ட மற்றும் கைத்தொழில்அமைச்சராக இருந்த போது மலையக மக்களுக்கு காணிகளைப் பெற்றுக்கொடுக்கும் அமைச்சவை பத்திரத்தில் தெளிவாக பல விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

கடந்த இரண்டு வருடங்களில் தனிவீடு மற்றும் காணி உரிமைகளைப் பெற்றுக்கொடுத்து வருகிறோம். 1978ஆம் ஆண்டு மலைநாட்டு அமைச்சு வழங்கப்பட்ட பின்னர் முதல்முறையாக தமிழ் முற்போக்குக்கூட்டணியால் இவ்வாறு அபிவிருத்தித் திட்டங்கள் மலையகத்தில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

ஆசியர் உதவியலாளர்களின் விவகாரம் தற்போது பாரிய பிரச்சினையாக மாறியுள்ளது. இவர்களை ஆசிரயர் உதவியாளர்களாகவும், ஆறாயிரம் ரூபாய் சம்பளத்திற்கும் உள்ளீர்க்கும் செயற்பாட்டுக்கு அன்று இருந்ததலைமைகள் தலைசாய்த்தமையாலேயே எங்களாலும் என்று இதற்குத் தீர்வுகாண முடியாதுள்ளது. என்றாலும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் தற்போது குழுவொன்று அமைத்துஇந்தப்பிரச்சினைக்குத் தீர்வுகாண நடவடிக்கையெடுத்துள்ளோம்.

நுவரெலியா மாவட்டத்தில் பிரதேசசபைகளை அதிகரித்துள்ளமை குறித்து சந்தோஷமடைந்தாலும், தோட்டபுற மக்களுக்கு அபிவிருத்தியை முன்னெடுக்க முடியாத வகையில் 1987ஆம் ஆண்டு 33ஆம் இலக்கசட்டம் காணப்படுகிறது. இது இன்னமும் திருத்தப்படவில்லை. இதனைத் திருத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு இரண்டு வருடங்கள் கடந்துள்ளன. இச்சட்டம் திருத்தப்பட்டால்தான் மலையக மக்களுக்குதங்கு தடையின்றி அபிவிருத்தியை முன்னெடுக்க முடியும். இக்கட்டான சூழிலல் பொறுப்பேற்று இன்று ஒருகுறிப்பிட்ட அடைவு மட்டத்தை அடைந்துள்ளோம்.பல சவால்களை எதிர்க்கொண்டு எமது பயணம்தொடர்கிறது” 

மலையகத்திலே வேலைத்திட்டங்கள் முன்னெடுப்பது தொடர்பில் காணப்படக்கூடிய பிரச்சினைகளுக்கு அமைச்சின் கீழ் வரக்கூடிய நிறுவனங்கள் தொடர்பிலும் தெளிவுபடுத்த வேண்டியுள்ளது. குறித்த அமைச்சுக்கு கீழாக பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியமும், சௌமியமூர்த்தி தொண்டமான ஞாபகார்த்த மன்றமுமே உள்ளது. இரண்டுமே முழுமையான அரச நிறுவனங்கள் இல்லை. நிதியம் கம்பனிச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட தனியார் நிறுவனம். மற்றையது ஒரு குடும்பத்தின் கட்டுப்பாட்டில் இயங்கக் கூடிய மன்றம்.

சௌமியமூர்த்தி தொண்டமான் இந்த நாட்டிற்காக மலையக மக்களுக்காக சேவையாற்றியவர் என்பதை மறுக்கவில்லை. அதனால்தான் பழைய பாராளுமன்றத்திற்கு முன்பு சிலையும் இந்த பாராளுமன்றத்தில் திருவுவருப்படமும் வைக்கப்பட்டு கௌரவம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், அவரது பெயரில் உருவாக்கப்பட்ட மன்றம் பாராளுமன்றத்தில் கூட்டிணைக்கப்பட்டது. அந்த மன்றத்தின் பணிப்பளார் சபை உறுப்பினர்களாக சௌமிய மூர்த்தி தொண்டமான் குடும்பத்தினர் ஆயுட் கால உறுப்பினராகவும் அவரால் நியமிக்கப்படும் இருவரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பில் ஒரு உறுப்பினரும் என ஒரு குழுவினரின் கட்டுப்பாட்டில் உள்ளது.

இவர்களுக்கு மேலதிகமாக இந்த மன்றத்தின் உறுப்பினர்களாக எதிர்கட்சி உறுப்பினரும் திறைசேரி உறுப்பினர் ஒருவரும் உள்வாங்கப்படும் போதும் இப்போதைய பிரதமர் எதிர்கட்சி தலைவராக இருந்த காலத்தில் ஒரு கூட்டத்திலேனும் கலந்துகொண்டிருக்கவில்லை. அதேபோல இப்போதைய எதிர்கட்சித் தலைவர் சம்பந்தனுக்கும் இந்த மன்றம் தொடர்பில் ஒரு பொறுப்பு இருக்கின்றது. மலையக மக்களின் அபிவிருத்தி விடயம் குறித்து அக்கறையுடன் பேசும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் அந்த அக்கறையுடன் பங்களிப்பும் செய்யக்கூடிய இடமாக எதிர்கட்சிதலைவர் என்ற பதவிநிலையில் இருந்து செயற்படல் வேண்டும்.

காரணம் இந்த மன்றத்தில் கடந்த காலங்களில் இடம்பெற்ற கணக்கீடுகளில் உள்ள முறைகேடுகள் பற்றி கணக்காய்வாளர் அதிபதி திணைக்களம் விடுத்திருக்கும் அறிக்கையில் பல்வேறு மோசடிகள் வெளிப்பட்டுள்ளன. இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் கட்சி கட்டட செலவுகளுக்காக மன்றத்தின் ஊடாக அரசாங்க நிதி கையாளப்பட்டுள்ளது. அதேபோல 90 ஊழியர்கள் பிரஜா சக்தி திட்டத்தின் ஊடாக நியமிக்கப்பட்டு சம்பளம் வழங்கப்பட்டிருப்பதுடன் அவர்களுக்கு எவ்வித நியமன கடிதங்களும் வழங்கப்படவில்லை. இதுபோல பல முறைகேடான நிதி கையாளுகை கணக்காய்வாளர் அறிக்கையிலே சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. எனவே இது பற்றி விசாரிக்க போரும் பொறுப்பு அந்த மன்றத்தின் பணிப்பாளர் என்ற வகையில் எதிர்கட்சி தலைவரான சம்பந்தன் ஐயாவுக்கு உண்டு. இந்த பாராளுமன்றத்திற்கும் உண்டு. கோப் குழுவுக்கு உண்டு. இவர்களின் தேவைக்காக இந்த அனைத்து ஆவணங்களையும் நான் பாராளுமன்ற சபைக்கு சமர்ப்பிக்கின்றேன். ஊழல் தொடர்பாக பேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள் கோப் குழுவில் அங்கம் வகிக்கின்றீர்கள் . அந்த குழுவின் ஊடாக விசாரணைகளை மேற்கொள்ள அழுத்தம் கொடுக்க வேண்டும்.

கோப் போன்ற பாராளுமன்ற குழுக்கள் பொது முயற்சிகள் முறையான செயற்பாட்டையும் நிதி கையாளுகை கணக்கு வழக்கு முறைமையை ஆய்வு செய்கின்றன. இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அரசியல் கட்சியின் அமைப்புக்கு அரசாங்க நிதி பயன்படுத்தப்பட்டுள்ளமையை கண்க்காய்வு அறிக்கைக்கு கோப்பா குழுவே சுட்டிக்காட்டியுள்ளது.” எனக் குறிப்பிட்டார்.

Latest News

Calendar

« February 2018 »
Mon Tue Wed Thu Fri Sat Sun
      1 2 3 4
5 6 7 8 9 10 11
12 13 14 15 16 17 18
19 20 21 22 23 24 25
26 27 28        
Go to top