கூட்டு ஒப்பந்தத்துக்கு எதிராக வீதியில் இறங்கிய தொழிலாளர்கள் கைது

கூட்டு ஒப்பந்தத்துக்கு எதிராக வீதியில் இறங்கிய தொழிலாளர்கள் கைது

கூட்டு ஒப்பந்த காலத்தில் பொகவந்தாலாவை – ஹட்டன் பிரதான வீதியில் போரட்டத்தில் ஈடுப்பட்ட தொழிலாளர்கள் 5 பேரை இன்று நோர்வுட் பொலிஸார் இன்று கைது செய்துள்ளனர்.

பெருந்தோட்ட தொழிலாளர்கள் 1,000 ரூபாய் சம்பள உயர்வு கோரி கடந்த கூட்டு ஒப்பந்த காலத்தில் மலையகம் முழுவதும் போராட்டங்கள் நடத்தப்பட்டது.

இப்போராட்டங்கள் பல்வேறு வடிவங்களில் மலையகம் முழுவதிலும் மேற்கொள்ளப்பட்டதுடன், பொகவந்தாலவை ஹட்டன் பிரதான வீதியை மறைத்து சுமர் 3 மணித்தியாலங்கள் சென்ஜோன் டிலரிமக்களும் போராட்டத்தில் ஈடுப்பட்டிருந்தனர்.

2016 ஆண்டுக்காலப் பகுதியில் இப்போராட்டம் நடைபெற்றதுடன், ஒரு வருடம் கடந்த நிலையில், குறித்த போரட்டத்தை ஏற்பாடு செய்திருந்த 5 தோட்ட தொழிலாளர்களை நோர்வுட் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட 5 தோட்ட தொழிலாளர்களையும் ஹட்டன் நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எனினும், ஒரு வருடங்கள் கடந்து தற்போது கைது செய்யப்படுவது நோர்வுட் பொலிஸாரின் பழிவாங்கும் நடவடிக்கை என சென்ஜோன் டிலரி மக்கள் தெரிவிக்கின்றனர்.

Latest News

Calendar

« February 2018 »
Mon Tue Wed Thu Fri Sat Sun
      1 2 3 4
5 6 7 8 9 10 11
12 13 14 15 16 17 18
19 20 21 22 23 24 25
26 27 28        
Go to top