கேப்பாப்புலவு காணிகள் 31இற்கு முன்னர் விடுவிப்பு

கேப்பாப்புலவு காணிகள் 31இற்கு முன்னர் விடுவிப்பு

கேப்பாப்பாபுலவில் இராணுவத்தினர் வசமுள்ள பொதுமக்களின் அனைத்துக் காணிகளும் இம்மாதம் 31ஆம் திகதிக்கு முன்னர் விடுவிக்கப்படும் என்று சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, மீள்குடியேற்றம், புனர்வாழ்வு மற்றும் இந்து கலாசார அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற 2018ஆம் நிதியாண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தில் மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி, தேசிய கலந்துரையாடல், சகவாழ்வு மற்றும் அரச கருமமொழிகள், சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, இந்துமத விவகார அமைச்சுகளின் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன், "இரணைதீவுக் காணிகளை விடுவிப்பதாக உறுதியளித்திருந்தீர்கள். இதுவரை விடுவிக்கப்படவில்லை. உங்களது கருத்துகளை நம்ப முடியாதுள்ளது" என்று அமைச்சர் சுவாமிநாதனிடம் கேள்வி எழுப்பினார்.

இதற்குப் பதிலளித்த அமைச்சர் சுவாமிநாதன், "கேப்பாப்பிலவில் உள்ள மக்களின் காணிகள் அனைத்தும் இம்மாதம் 31ஆம் திகதிக்கு முன்னர் விடுவிக்கப்படும். இரணைதீவு காணிகள் குறித்து அரசுடனும், பாதுகாப்புத் தரப்புடனும் பேசித்தான் தெரிவிக்க முடியும்" எனக் குறிப்பிட்டார்.

Latest News

Calendar

« February 2018 »
Mon Tue Wed Thu Fri Sat Sun
      1 2 3 4
5 6 7 8 9 10 11
12 13 14 15 16 17 18
19 20 21 22 23 24 25
26 27 28        
Go to top