ஷஷிக்கு எதிரான வழக்கின் மேலதிக சாட்சிய விசாரணை அடுத்த வருடம்

ஷஷிக்கு எதிரான வழக்கின் மேலதிக சாட்சிய விசாரணை அடுத்த வருடம்

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்சவின் மனைவியான ஷஷி வீரவன்சவுக்கு எதிரான வழக்கின் மேலதிக சாட்சிய விசாரணைக்கான தினங்களாக பெப்ரவரி 6ஆம் மற்றும் 27ஆம் திகதிகள், கொழும்பு பிரதான நீதவான் லால் ரணசிங்க பண்டாரவினால், இன்று குறிக்கப்பட்டன.

இன்றைய தினம், 16ஆவது சாட்சியான ஆட்பதிவுத் திணைக்களத்தின் பிரதி ஆணையாளரின் தனிப்பட்ட உதவியாளர் பிரசாத் ராஜேந்திர பெரேராவிடம் சாட்சிய விசாரணை நடத்தப்பட்டது.

அதன் பின்னர், மேலதிக விசாரணைகளுக்கான திகதிகள் அறிவிக்கப்பட்டதுடன், சாட்சியாளர்களுக்கு அழைப்பாணையும் பிறப்பிக்கப்பட்டது.

ஷஷி வீரவன்ச, போலிப் பெயர் மற்றும் போலியான பிறந்த தினத்தைக் கொண்டு இரண்டு அடையாள அட்டைகளை எடுத்துள்ளமை தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்ததுடன், அவற்றைக் கொண்டு இராஜதந்திர மற்றும் சாதாரண கடவுச்சீட்டுக்களை பெற்ற குற்றச்சாட்டு தொடர்பில், குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் வழக்குத் தொடரப்பட்டது.

ரணசிங்ககே ரண்முத்து முதியன்சலாகே ஷேஹசா உதயகாந்தி மற்றும் ரணசிங்ககே ரண்முத்து முதியன்சலாகே ஷிர்ஷா உதயகாந்தி ரணசிங்க ஆகிய பெயர்களில் இரண்டு கடவுச்சீட்டுகள் பெறப்பட்ட குற்றச்சாட்டுத் தொடர்பில் 2015ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் கைது செய்யப்பட்ட அவர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.

முறைப்பாட்டாளர் சார்பில் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் ஆஜராகியிருந்ததுடன், ஷஷி வீரவன்ச சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணிகளான அனில் சில்வா மற்றும் ஜயந்த வீரசிங்க ஆகியோர் ஆஜராகியிருந்தனர்.

Latest News

Calendar

« February 2018 »
Mon Tue Wed Thu Fri Sat Sun
      1 2 3 4
5 6 7 8 9 10 11
12 13 14 15 16 17 18
19 20 21 22 23 24 25
26 27 28        
Go to top