புகையிரத சேவை வர்த்தமானி அறிவித்தலை மீளப்பெற வேண்டும்

புகையிரத சேவை வர்த்தமானி அறிவித்தலை மீளப்பெற வேண்டும்

ஜனநாயகத்தையும், தொழிற்சங்க உரிமைகளையும் ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கும் வகையில் மக்கள் பாதுகாப்புச் சட்டத்தை பயன்படுத்தி வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலை அரசு உடனடியாக மீளப்பெற வேண்டுமென பொது எதிரணியின் தலைவர் தினேஸ் குணவர்தன கோரிக்கை விடுத்தார்.

புகையிரதசேவை அத்தியாவசிய சேவையாக மாற்றப்பட்டமை குறித்த வர்த்தமானி அறிவித்தலுக்கு கடந்த சனிக்கிரமை நாடாளுமன்றம் அங்கீகாரம் வழங்கியிருந்தது. இது குறித்து நேற்று நாடாளுமன்றில் நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு வலியுறுத்தினார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் “மக்கள் பாதுகாப்புச் சட்டத்தை பயன்படுத்தி புகையிரத சேவையை அத்தியவசிய சேவையாக அரசு அறிவித்துள்ளது. இந்த வர்த்தமானி ஜனநாயகத்திற்கு விரோதமானதாகும். ஒருவருடத்திற்கு மேலாக தமது கோரிக்கையை முன்வைத்து வந்தனர். இதற்கு தீர்வுகாணப்படாமையின் காரணமாகவே, போராட்டம் வெடிகிறது.

ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கி தொழிற்சங்கப் போராட்டங்களை வெற்றிக்காணலாம் என்று அரசு எண்ணுவது அரசின் இலயாலாமையை வெளிக்காட்டுகிறது. தொழிற்சங்க உரிமைகள் ஒடுக்குமுறைக்கு உள்ளாக்க அரசு முற்பட்டால் ஏனைய தொழில்சங்கப் போராட்டத்தில் குதிக்கும்.

எனவே, இந்த பாரதூதரமான வர்த்தமானியை அரசு உடனடியாக ரத்துசெய்ய வேண்டும். 5இலட்;சத்திற்கும் அதிகமான மாணவர்கள் க.பொ.த. சாதாரணதரப் பரீட்சைக்கு ஐந்து இலட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் பங்குபற்றுகிறனர். நாளைமுதல் பரீட்சையை நடத்திச்செல்ல வெட்கமில்லாது அரசு ஒரு அடி பின்நோக்க வேண்டும்.” என்றார்.

Calendar

« January 2018 »
Mon Tue Wed Thu Fri Sat Sun
1 2 3 4 5 6 7
8 9 10 11 12 13 14
15 16 17 18 19 20 21
22 23 24 25 26 27 28
29 30 31        
Go to top