கினிகத்தேனயில் ஆர்ப்பாட்டம்; போக்குவரத்து பாதிப்பு

கினிகத்தேனயில் ஆர்ப்பாட்டம்; போக்குவரத்து பாதிப்பு

போட்லேன் நீர் மீன் உற்பத்தி நிலைய வேலைத்திட்டத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நட்டஈடு வழங்ககோரி, கொழும்பு - ஹட்டன் பிரதான வீதியில் கலுகல சந்தியில் மேற்கொள்ளப்பட்ட ஆர்பாட்டத்தினால் கொழும்பு - ஹட்டன் மற்றும் லக்ஷபான வீதிகளில் போக்குவத்து முற்றாக தடைப்பட்டது.

கினிகத்தேன பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொல்பிட்டிய போட்லேன்ட் நீர் மின் உற்பத்தி நிலைய நீர்மானப்பணிகள் காரணமாக, குடியிருப்புகளின் நிலம் தாழிறங்கிய நிலையில், 33 குடும்பங்கள் அந்தப்பிரதேசத்திலிருந்து வெளியேற்பட்டனர்.

வெளியேற்பட்டவர்களுக்கு நட்டஈடு வழங்குவதாக கூறியும் இதுவரையில் நட்டஈடுவழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்காமைக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்றுக் காலை 9 மணிமுதல் இந்த ஆர்பாட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

“பாதிக்கப்பட தமக்கு தற்காலிகமாக வாடகை குடியிருப்புகளில் தங்குவதற்கு மாதாந்தம் 30 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகின்ற போதும், தொடர்ந்தும் இவ்வாறு வாடகை வீட்டில் இருக்க முடியாது” என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.

கடந்த 15 நாட்களாக போட்லேன் மின் உற்பத்தி நிலைய நுழைவாயிலில் சத்தியாகிர போராட்டத்தில் ஈடுபட்டுவந்த மக்கள், அது தொடர்பில் அரசாங்கம் எவ்வித நடவடிக்கையும் எடுக்காத நிலையில், வீதியை மறித்து ஆர்பாட்டதை முன்னெடுத்தனர்.

Calendar

« January 2018 »
Mon Tue Wed Thu Fri Sat Sun
1 2 3 4 5 6 7
8 9 10 11 12 13 14
15 16 17 18 19 20 21
22 23 24 25 26 27 28
29 30 31        
Go to top