உள்ளூராட்சி தேர்தல் 2018; அம்பாறையில் 37 பெண்கள் களத்தில்

உள்ளூராட்சி தேர்தல் 2018; அம்பாறையில் 37 பெண்கள் களத்தில்

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட 8 உள்ளூராட்சி சபைகளிலும் போட்டியிடுவதற்கு, இம்முறை மொத்தமாக 37 பெண் உறுப்பினர்களுக்கு இட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஒவ்வொரு உள்ளூராட்சி சபைக்குமான உறுப்பினர்களில் 25 வீதமானோர் பெண்களாக இருக்க வேண்டுமென, உள்ளூராட்சி திருத்தச் சட்டத்துக்கு அமைய, மேற்படி 8 சபைகளிலும் 37 பெண் உறுப்பினர்கள் பெயரிடப்படவுள்ளனர்.

கல்முனை மாநகர சபையில் 10, அக்கரைப்பற்று மாநகர சபையில் 5, சம்மாந்துறை பிரதேச சபையில் 5, இறக்காமம் பிரதேச சபையில் 3, அக்கரைப்பற்று பிரதேச சபையில் 2, பொத்துவில் பிரதேச சபையில் 5, அட்டாளைச்சேனை பிரதேச சபையில் 4, நிந்தவூர் பிரதேச சபையில் 3 எனும் வகையில் இந்த பெண் உறுப்பினர்கள் பெயரிடப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Calendar

« January 2018 »
Mon Tue Wed Thu Fri Sat Sun
1 2 3 4 5 6 7
8 9 10 11 12 13 14
15 16 17 18 19 20 21
22 23 24 25 26 27 28
29 30 31        
Go to top