மலையக இளைஞன் சிறைக்கூடத்தினுள் தற்கொலை; விசாரணைகள் ஆரம்பம்!

மலையக இளைஞன் சிறைக்கூடத்தினுள் தற்கொலை; விசாரணைகள் ஆரம்பம்!

கொழும்பு புறக்கோட்டை பொலிஸ் நிலைய சிறைக்கூடத்தில் இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொள்ள உதவி பொலிஸ் அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இன்று அதிகாலை ஹப்புத்தளை பிரதேசத்தைச் சேர்ந்த 17 வயதுடைய இளைஞர் ஒருவர் தூக்கிட்டுக் கொண்டதாக பொலிஸ் ஊடகப் பேச்ர் அலுவலகம் தெரிவித்திருந்தது.

குறித்த இளைஞர் கஞ்சாவை வைத்திருந்த குற்றச்சாட்டின் கீழ் புறக்கோட்டை பெஸ்டியன் மாவத்தை பகுதியில் வைத்து நேற்று இரவு கைது செய்யப்பட்டு சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், இன்று அதிகாலை தான் அணிந்திருந்த சட்டையை பயன்படுத்தி சுருக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

Latest News

Calendar

« January 2018 »
Mon Tue Wed Thu Fri Sat Sun
1 2 3 4 5 6 7
8 9 10 11 12 13 14
15 16 17 18 19 20 21
22 23 24 25 26 27 28
29 30 31        
Go to top