கூறிய ஆயுதத்தால் தாக்கி பெண் கொலை

கூறிய ஆயுதத்தால் தாக்கி பெண் கொலை

கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்யப்பட்டிருந்த நிலையில் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

மொரட்டுவை ராவத்தை பிரதேசத்தில் குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.

அவசர தொலைபேசி இலக்கத்தின் ஊடாக மொரட்டுவை பொலிஸ் நிலையத்திற்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய நேற்று இந்த சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொலை செய்யப்பட்டுள்ளவர் ராவத்தை பிரதேசத்தை சேர்ந்த 44 வயதான பெண்ணொருவர் எனவும் கொலைச் சம்பவம் தொடர்பில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லையெனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Calendar

« January 2018 »
Mon Tue Wed Thu Fri Sat Sun
1 2 3 4 5 6 7
8 9 10 11 12 13 14
15 16 17 18 19 20 21
22 23 24 25 26 27 28
29 30 31        
Go to top