கம்பஹாவில் மினி சூறாவளி

கம்பஹாவில் மினி சூறாவளி

கம்பஹா மாவட்டத்தில் நேற்று வீசிய மினி சூறாவளியால் சுமார் 300 வீடுகள் கடுமையாகச் சேதமடைந்துள்ளது.

வல்பிட்ட, கட்டுகிரிந்த, சிறிகம்பாத்த, திக்லந்த, அலுகொல்ல ஆகிய பகுதிகளில் நேற்று மாலை சுமார் ஆறு மணியளவில் வீசத் தொடங்கிய இந்தக் கடுங்காற்று, சில நிமிடங்களில் மினி சூறாவளியாக மாறியுள்ளதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

இதனால் மரங்கள் முறிந்து வீடுகள் மீது விழுந்துள்ளன. இதில் 300க்கும் அதிகமான வீடுகள் கடுமையாகச் சேதமுற்றன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதியில் மின்சார விநியோகம் துண்டிக்கப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

தீடிரென ஏற்பட்ட மினி சூறாவளியினை தொடர்ந்து பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளனர்.

மேலும் பொலிஸ் மற்றும் இராணுவம் மூலம் பாதிக்கப்பட்ட அப்பகுதி மக்களுக்கு உடனடியாக நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றது.

Calendar

« January 2018 »
Mon Tue Wed Thu Fri Sat Sun
1 2 3 4 5 6 7
8 9 10 11 12 13 14
15 16 17 18 19 20 21
22 23 24 25 26 27 28
29 30 31        
Go to top