தீயில் எரிந்த வர்த்தக நிலையங்கள்

தீயில் எரிந்த வர்த்தக நிலையங்கள்
லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மெராயா நகரில் காண்ப்பட்ட இரண்டு சில்லறை வர்த்தக நிலையங்கள் தீயினால் எரிந்து முழுமையாக சேதமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
 
இன்று அதிகாலை 3.15 மணியளவில் இந்த  தீவிபத்து ஏற்பட்டுள்ளதுடன், இதன்காரணமாக யாருக்கும்உயிராபத்தோ, காயங்களோ ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
பிரதேச பொது மக்கள், பொலிஸார், நுவரெலியா மாநகர சபையினரின் தீயணைப்பு பிரிவினர் ஆகியோர் இணைந்து தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.
 
எனினும், பொருட்கள் மற்றும் ஆவணங்கள் அனைத்தும் தீக்கிரையாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 
தீ ஏற்பட்டதற்கான காரணம் கண்டறியப்படவில்லை என்றும் மின்சார ஒழுக்கு காரணமாக இத்தீ ஏற்பட்டிருக்கலாம் எனவும் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
 
ஏற்பட்ட தீ காரணம் தொடர்பாகவும், சேதவிவரங்கள் தொடர்பாகவும் லிந்துலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
SHOP FIRE (3).jpg
SHOP FIRE (2).jpg

Latest News

Calendar

« February 2018 »
Mon Tue Wed Thu Fri Sat Sun
      1 2 3 4
5 6 7 8 9 10 11
12 13 14 15 16 17 18
19 20 21 22 23 24 25
26 27 28        
Go to top