வர்த்தமானியை வாபஸ் வாங்க வைத்த ஜனாதிபதிக்கு இ.தொ.கா நன்றி தெரிவிப்பு

வர்த்தமானியை வாபஸ் வாங்க வைத்த ஜனாதிபதிக்கு இ.தொ.கா நன்றி தெரிவிப்பு
aமதுபான விற்பனை நிலையங்களில் பெண்கள் பணிபுரியும் வகையில் கொண்டு வரப்பட்ட அமைச்சரவைப் பத்திரத்துக்கு எதிர்ப்பு வெளியிட்டு அதனை இரத்துச்செய்ய நடவடிக்கை எடுத்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு நன்றி கூறுவதாக ஊவா அமைச்சர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
 
ஊடகங்களுக்கு அனுப்பியுள்ள செய்திக்குறிப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
 
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “இலங்கை ஐரோப்பிய நாடுகள் போன்றதல்ல. அந்நாடுகள் முற்போக்கு கொள்கைகளைக் கொண்டதாகும். அந் நாடுகளில் கலாசாரம், பண்பாடு என்பவற்றில் நாகரீகம் அதிகரித்துக் காணப்படுகின்றன. 
 
எமது நாட்டைப் பொறுத்தவரையில், பெண்களுக்கென்று தனித்துவமான கௌரவமும், மதிப்பும் இருந்து வருகின்றது. அதற்கான கலாசாரமும், பண்பாடும், எமது நாட்டில் மேலோங்கி காணப்படுகின்றது.
 
மதுபானங்கள் விற்பனை செய்யும் இடங்களில், பெண்களை ஈடுபடுத்துவது, கலாசார சீரழிவிற்கு காரணமாக அமைந்து விடும். அத்துடன் பெண்களின் உயரிய நிலைக்கு களங்கத்தையும் ஏற்படுத்திவிடும்.
 
மதுபானம் விற்பனை நிலையங்களில் பெண்களை ஈடுபடுத்துவதை விடுத்து, கல்வி மற்றும் சுகாதாரம் ஆகிய துறைகளில் பெண்களுக்கு முன்னுரிமைகளை வழங்கினால் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அதனை வரவேற்கும்” என்றார்.

Latest News

Calendar

« February 2018 »
Mon Tue Wed Thu Fri Sat Sun
      1 2 3 4
5 6 7 8 9 10 11
12 13 14 15 16 17 18
19 20 21 22 23 24 25
26 27 28        
Go to top