பிரதமர், முக்கிய அமைச்சர்கள் கலந்துரையாடல்; பதவியை துறப்பாரா ரணில்

பிரதமர், முக்கிய அமைச்சர்கள் கலந்துரையாடல்; பதவியை துறப்பாரா ரணில்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையில் நேற்றிரவு நடத்தப்பட்ட பேச்சுக்கள் இணக்கபாடு எதுவும் எட்டப்படாமலேயே முடிவடைந்த நிலையில், பிரமருக்கும் ஒரு சில அமைச்சர்களுக்கும் இடையில் பேச்சுவார்த்தை ஒன்று இடம்பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ள.

இந்த பேச்சுவார்த்தையில், அமைச்சர்களான மலிக் சமரவிக்ரம, சாகல ரத்நாயக்க, அகில விராஜ் காரியவசம் மற்றும் நலின் பண்டார உள்ளிட்டவர்கள் பங்கேற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் சந்திப்பு இடம்பெற்றது. இதில் உள்ளூராட்சித் தேர்தலை அடுத்து ஏற்பட்டுள்ள தற்போதைய அரசியல் சூழல் குறித்து விவாதிக்கப்பட்டது.

இந்தச் சந்திப்பில் பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபால, அமைச்சர் மஹிந்த அமரவீர ஆகியோர் மைத்திரிபால சிறிசேனவுடனும், ஐதேக தவிசாளர் மலிக் சமரவிக்கிரம மற்றும் பொதுச்செயலர கபீர் காசிம் ஆகியோர் ரணில் விக்கிரமசிங்கவுடனும் பேச்சுக்களில் பங்கேற்றனர்.

இந்தச் சந்திப்பின் போது, கூட்டு அரசாங்கத்தைத் தொடர்வதற்கு பிரதமர் பதவியில் இருந்து ரணில் விக்ரமசிங்க விலகி, ஐதேகவைச் சேர்ந்த மற்றொருவரை பிரதமராக நியமிக்குமாறு ஜனாதிபதி கேட்டுக்கொண்டதாக  தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும், இந்தக் கோரிக்கையை ஏற்று பதவி விலக ரணில் விக்ரமசிங்க மறுத்து விட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை இணைந்து கொள்ளும் திட்டம் முன்வைக்கப்பட்ட போது ஒரு அமைச்சர்கள் ஏற்றுக்கொண்டதாகவும் எனினும் ஐ.தே.மு அரசாங்கத்தில் இடம்பெற பெரும்பாலான சுதந்திரக் கட்சி அமைச்சர்கள் மறுத்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

இவர்கள் நாடாளுமன்றத்தில் சுதந்திரமாக செயற்படவுள்ளதாக கூறியுள்ளனர்.

இந்த நிலையில் நேற்றைய சந்திப்பில் எந்த தீர்மானமும் எடுக்கப்படாததால், இன்றும் பேச்சுக்கள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகின்ற சூழ்நிலையில், பிரதமர் மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்டவர்களுக்கு இடையில் கலந்துரையாடல் இடம்பெற்று வருகின்றது.

Latest News

Calendar

« February 2018 »
Mon Tue Wed Thu Fri Sat Sun
      1 2 3 4
5 6 7 8 9 10 11
12 13 14 15 16 17 18
19 20 21 22 23 24 25
26 27 28        
Go to top